சென்னை ஓட்டலுக்கு வேலைக்கு போன கணவன்.. வில்லங்க காதலால் விழுப்புரம் சசிகலா ஆயுள் கைதியான கதை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த சத்யராஜ், சென்னையில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சசிகலா சொந்த ஊரான செஞ்சி பகுதியிலேயே இருந்தார். சத்யராஜ் மாதம் இருமுறை மட்டும் மனைவியை பார்க்க வந்து சென்றுள்ளார். மனைவி சசிகலாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. காதலுடன் சேர்ந்து கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட சசிகலாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவன் மனைவி பிரிந்து வேறுவேறு இடங்களில் வசித்து வரும் போது, சில சமயங்களில் கள்ளக்காதல் ஏற்படுகிறது. கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவர் சில நேரங்களில் திருமணத்தை மீறிய உறவில் சிக்குவது நடக்கிறது. அப்படி திருமணத்தை மீறிய உறவில் சிக்கும் பெண்கள், கணவனை காலி செய்யவும் தயங்குவது இல்லை.. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சென்னைக்கு வேலைக்கு போன கணவன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜம்போதி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 34 வயதாகும் சத்யராஜ் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா (27) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. கல்யாணத்திற்கு பிறகு சத்யராஜ் மனைவியை தனது பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு சென்னைக்கு வேலைக்காக சென்றுவிட்டார்.
பக்கத்து வீட்டு ஜானகி ராமனுடன் கள்ளக்காதல்
பின்னர் அவர் 15 நாட்களுக்கு ஒருமுறை மனைவி சசிகலாவை பார்க்க சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சத்யராஜ் வீட்டின் எதிரே வீட்டில் வசிக்கும் ஜானகிராமன் (28) என்பவருக்கும் சசிகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில், கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவருக்கும் கணவன் இல்லாத நேரங்களில் ஜாலியாக இருந்து வந்தார்களாம்.
சத்யராஜ் இடையூறு
இவர்களது கள்ளக்காதலுக்கு சத்யராஜ் ஒரு கட்டத்தில் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கள்ளக்காதல் ஜோடி சத்யராஜை தீர்த்துககட்ட சதி திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதன்படி சசிகலா தனக்கு அரசு வேலை கிடைத்துள்ளதாக கூறி தனது கணவர் சத்யராஜை சென்னையில் இருந்து வரவழைத்துள்ளார்.
ஆட்டை போல்
கடந்த 22.03.2023 அன்று இரவு சசிகலா ஸ்கூட்டரில் சத்யராஜை ஏற்றிக் கொண்டு மொடையூர் ஆற்றுப்பாலம் கீழ் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் சசிகலா தனது கணவரின் கை, கால்களை பிடித்துக் கொணடார். அப்போது அங்கு மறைந்திருந்த கள்ளக்காதலன் ஜானகிராமன் சத்யராஜின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கத்தியால் அறுத்தார். அதன்பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்கள். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சத்யராஜை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் பல நாள் சிகிசைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, சசிகலா, ஜானகிராமன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பான வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1- ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சத்யராஜை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஜானகிராமன், சசிகலா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications