நான் உள்ளே பூட்டிக்கிட்டேன்.. ரஞ்சித் வந்து துண்டை போட்டார்.. ஒரே அடி.. கொஞ்சம் கூட கவலையே படாத லதா!
கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்
விழுப்புரம்: "நான் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு.. என் கணவனின் தலையில் சுத்தியால் அடித்தேன்.. உடனே ரஞ்சித் அவரது கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொன்றுவிட்டார்" என்று கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற லதா எந்தவித டென்ஷனும் இல்லாமல் ஒரு வாக்குமூலம் தந்துள்ளார்!
விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன்... 35 வயதாகிறது.. தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தவர். ஷிப்ட் நேரம் போக, விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தார்.

இவரது மனைவி லதா... 6 வயதில் சங்கவி என்ற மகள் இருக்கிறார்.. லதாவுக்கு 27 வயதாகிறது.. ஆவின் நிறுவனத்தில் ராஜகுமாரன் கார் ஓட்டி வந்தபோது ரஞ்சித் என்பவர் பழக்கமானார்.. அவரும் அங்கு ஒப்பந்த ஊழியர்தான்.. விழுப்புரத்தை சேர்ந்தவர்.. 25 வயதாகிறது!
ரஞ்சித் - ராஜகுமாரன் நட்பு நெருக்கமானது.. அதனால் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார் ரஞ்சித்.. வீட்டுக்கு வர தொடங்கியதும், லதாவுடன் நெருக்கம் அதைவிட அதிகமாகிவிட்டது.. கள்ளத்தொடர்பு தீவிரமானது.. இந்த விஷயம் ராஜகுமாரனுக்கு தெரிவதற்கு முன்பே அந்த வீட்டின் ஹவுஸ் ஓனருக்கு தெரிந்துவிட்டது.. அதனால் இவர்களை வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டனர்.
இதையடுத்து 3 மாசத்துக்கு முன்பு ராஜகுமாரன் சொந்த ஊரான வி.அரியலூரில் குடும்பத்துடன் குடியேறினார்... ஆனால் அங்கேயும் ரஞ்சித் சென்று வந்துள்ளார்.. இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை ராஜகுமாரன் வீட்டில் சடலமாக கிடந்தார்.. இதை பார்த்ததும் லதா அக்கம்பக்கம் எல்லாரையும் அழைத்து கதறி ஒப்பாரி வைத்தார்.. கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பதறியடித்தபடி அழுது கொண்டே இருந்தார்.
தகவலறிந்து விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். ராஜகுமாரனின் உடலை கைப்பற்றியபோது, அவரது கழுத்தில் காயம் இருந்ததை கண்டனர். மேலும் சடலம் அருகில் சம்பவத்தன்று இரவு ராஜகுமாரன் டிபன் வாங்கி வந்துள்ளார்.. அந்த டிபன் பொட்டலமும் பிரிக்கப்படாமல் அப்படியே கிடந்தது.. கழுத்து பகுதி இறுக்கப்பட்ட நிலையில் இருந்ததால், போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.. முதல் விசாரணையே லதாவிடம்தான் ஆரம்பமானது.
ஆரம்பத்தில் உளறினாலும் பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார் லதா. "எனக்கு ரஞ்சித்துடன் உறவு ஏற்பட்டது.. ஆனால் கணவர் அட்வைஸ் செய்து கொண்டே இருந்தார்... எங்களுக்கு எரிச்சலாக, இடையூறாக இருந்தது... நைட் வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது டிபன் வாங்கி வந்தார்.. அந்த நேரத்தில் நானும் ரஞ்சித்தும் ஜாலியாக இருந்தோம்.. இதை கணவர் நேரில் பார்த்துவிட்டார்... எங்களுக்குள் சண்டை நடந்தது.
உடனே நான் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு கணவர் ராஜகுமாரன் தலையில் சுத்தியால் அடித்தேன்.. உடனே ரஞ்சித் ராஜகுமாரன் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொலை செய்தார். பிறகு ரஞ்சித்தை எங்க வீட்டுக்கு பின்பக்க வழியாக வெளியேற்றிவிட்டேன்" என்று எந்தவித டென்ஷனும் இல்லாமல் வாக்குமூலம் தந்தார். இதையடுத்து ரஞ்சித்தையும் போலீசார் கைது செய்தனர்.. இப்போது கள்ளக்காதல் ஜோடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் உள்ளனர்!
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications