சித்தாளுடன் கிளாஸ்ரூமில் நுழைந்த கொத்தனார்.. விடிந்தும் வெளியே வரவில்லை.. விக்கித்த விழுப்புரம்
விழுப்புரத்தில் சித்தாள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்
விழுப்புரம்: பள்ளி வகுப்பறைக்குள் சித்தாளும், கொத்தனாரும் தூங்க போனார்களாம்.. ஆனால், காலையில் 10 மணி ஆகியும் அவர்கள் வெளியே வரவில்லையாம்.. இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மாம்பழப்பட்டு என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மலர்.. 45 வயதாகிறது.. இவர் சித்தாள் வேலை பார்த்து வருபவர்.
செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டேண்டு அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது.. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1,500 மாணவிகள் படித்து வருகின்றனர்.

மலர்
தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்சமயம் கட்டிட வேலை நடந்து வருகிறது.. பள்ளியில் கட்டிட விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால், அங்கேயே 20க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இங்குதான் மலரும் வேலை பார்த்து வருகிறார்.. இவருடன் வேலை பார்ப்பவர் கரிகாலன்.. 46 வயதாகிறது.. இவர் கொத்தனார் வேலை பார்க்கிறார்.. கட்டிட பணிகளில் மலரும், கரிகாலனும் சேர்ந்துதான் வேலை பார்த்து வருகிறார்கள்..

தகாத உறவு
நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால், கட்டிட தொழிலாளர்கள் வேலையை தொடங்கினர்.. அன்றைய தினம் இரவு, பள்ளி வகுப்பு அறையில் மலரும் கரிகாலனும் தூங்க சென்றுள்ளனர்.. ஆனால், காலை பத்து மணி வரை ரூமை விட்டு மலர் வெளியே வரவேயில்லை.. அதனால், சந்தேகமடைந்த மற்ற பணியாற்றிவர்கள் மலர் தங்கியிருந்த கிளாஸ் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர்.. அங்கு மலர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.. உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்...

கரிகாலன்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கட்டடத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக் தகவல்கள் வெளியானது... மலருக்கும், மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த கரிகாலனுக்கும் 10 வருடமாகவே தகாத உறவு இருந்துள்ளதாம்.. ஆனால், மலருக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் மலரை கரிகாலன் கொன்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது..

தலைமறைவு
காய்கறி வெட்டும் கத்தியால், மலரின் கழுத்தை அறுத்துள்ளார்.. மற்ற பணியாளர்கள் அத்தனை பேரும் அங்குள்ள நிலையில், கரிகாலன் மட்டும் தலைமறைவு ஆனது மேலும் சந்தேகத்தை உறுதிபடுத்தி உள்ளது.. இப்போது கரிகாலனை காணோம்.. தலைமறைவாகி உள்ளதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்... இந்த ஜோடிக்குள் கள்ளக்காதல் தகராறா? அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என்று உறுதியாக தெரியவில்லை.. அவர் கைது செய்யபட்ட பிறகுதான் கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிய வரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications