ஆபாசம்.. செல்போனுக்கு வந்த பெண்ணின் 'நிர்வாண போட்டோ'.. உற்று பார்த்து அதிர்ந்து நின்ற நபர்.. என்னாச்சு
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப்பிங் செய்து வெளியிட்ட இளைஞர் செய்து செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம்: திருமணம் மீறிய உறவுக்கு மறுத்த பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து போன் நம்பருடன் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகும் நிலையில், 16 மற்றும் 18 வயதில் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஊர் திரும்பிய நிலையில், தனது மனைவியின் நிர்வாண படம் செல்போன் நம்பருடன் பேஸ்புக்கில் வந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து மனைவியிடம் விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த முபாரக் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இப்படி இருக்கும்போதுதான் ராதாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இதனால் ராதா முபாரக்கை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் முபாரக், தன்னை காதலிக்க வேண்டும் என்றும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் ராதவை வலியுறுத்தியுள்ளார். இதற்கு ராதா மறுப்பு தெரிவித்த நிலையில் முபாரக் ராதாவின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்ப்பிங் செய்து அவருடை செல்போன் எண்ணையும் இணைத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். இதனால் ராதாவுக்கு நேற்று முழுவதும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. மேலும், போனில் தொடர்புகொண்டு பேசியவர் ஆபாசமாக பேசியதோடு, வாட்ஸ்அப்பிலும் ஆபாசமாக மெஸேஜ் அனுப்பியுள்ளனர்.
இந்த செல்போன் அழைப்புகளால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கையில் தான் அவரது கணவரும் பேஸ்புக் பதிவை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார். எல்லா பக்கமும் நெருக்கடி எழுந்த நிலையில் ராதாவுக்கும் அவருடைய கணவருக்கும் சண்டை எழுந்திருக்கிறது. அக்கம் பக்கத்தினர் பார்த்து இந்த சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு காரணம் முபாரக்தான் என்பதை அறிந்து கொண்ட ராதா அவரிடம் நியாயம் கேட்டிருக்கிறார்.
முபாரக், ராதாவை கடுமையான சொற்களால் திட்டி தன்னுடன் சேர்ந்து வாழ வராவிட்டால் இதைவிட அதிகமாக செய்வேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ராதா செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் நேற்று இரவு முபாரக்கை கைது செய்துள்ளனர். பெண்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த குற்றங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரை மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications