Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தள்ளாடியபடி கிளாஸ்க்கு வந்த பிளஸ் 2 மாணவர்கள்.. கேள்வி கேட்ட ஆசிரியருக்கு மது பாட்டிலால் பதில்.. அதிர்ந்த சிவகாசி

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரை, மது குடித்துவிட்டு வந்த பள்ளி மாணவர்கள் மதுபாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதிய உணவு இடைவெளிக்கு பிறகு தள்ளாடியபடியே வந்த மாணவர்களை ஏன் இப்படி வருகிறீர்கள் என்று கேட்டு தலைமை ஆசிரியரிடம் அழைத்து செல்வதாக கூறியதால் மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர். இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் போதையின் பின்னால் சென்று விடக் கூடாது, போதைக்கு அடிமையாகக் கூடாது என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளையும் அரசு செய்து வருகிறது. இருந்தபோதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் கூட மதுவுக்கு அடிமையாகும் சில சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

12th-grade-students-in-sivakasi-attack-teacher-with-bottle-after-coming-to-school-drunk

அரசு பள்ளி ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவர்கள் சிலர் லஞ்ச் பிரேக்கின் போது, மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளனர். தள்ளாடியபடியே மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர் ஒருவர் ஏன் இப்படி வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்வி சொல்லி கொடுக்கும் ஆசிரியர் என்றும் பாராமல், போதை மயக்கத்தில் பீர் பாட்டிலால் அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே திருத்தங்கலில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 47) என்பவர் அரசியல் அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். பள்ளிக்கு சண்முகசுந்தரம் தினமும் மதுரை திருமங்கலத்தில் இருந்து பேருந்தில் வந்து செல்வார். நீண்ட தூரத்தில் இருந்து வந்தாலும், சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மது போதையில் வந்த மாணவர்கள்

இதே போல் மாணவர்களையும் நேர்வழிப்படுத்தி வந்தார். பள்ளிப் பருவத்தில் அரசியல் அறிவை கற்றுக் கொடுத்து வந்துள்ளார். தலைமை ஆசிரியராலும் பாராட்டப் பெற்றவர். நேற்றும் வழக்கம் போல் ஆசிரியர் மதிய உணவுக்கு பிறகு சண்முகசுந்தரம் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் மட்டும் தாமதமாக பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள் தடுமாறியபடியே வந்துள்ளனர்.

இதைப் பார்த்த ஆசிரியர் சண்முகசுந்தரம், ஏன் இவ்வளவு நேரம் எங்கே போனீங்க.. ஏன் இப்படி நடந்து வருகிறீர்கள் என்று கேட்டார். அப்போதே அவர்கள் அருகே மது வாசனை வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், நீங்கள் மது குடித்து உள்ளீர்களா என்று கேட்டுள்ளார். இதற்கு மாணவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதை கவனித்த ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமை ஆசிரியரிடம் வாருங்கள் என்று அழைத்துள்ளார்.

மதுபாட்டிலால் தலையில் அடித்தனர்

அப்போது மாணவர்கள் இரண்டு பேர் ஆசிரியர் என்றும் பாராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் தலைமை ஆசிரியரிடம் வாங்க என்று அழைத்த போது, இரு மாணவர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து தலையில் தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, நாடி உள்ளிட்ட இடங்களில் கண்ணாடி பாட்டில் கிழித்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்ததும் இரு மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஆசிரியர்கள் சண்முகசுந்தரத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தகவல் அறிந்து வந்த போலீசார் 2 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்கள். மற்ற 2 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் இருவர் அரசு பள்ளி ஆசிரியரை மதுபாட்டிலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+