Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடு 25.. விருதுநகரை வெலவெலக்க வைத்த சம்பவம்.. "கிடை" போட முடியாமல் குமுறும் விவசாயிகள்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஆங்காங்கே ஆடுகள் அநியாயமாக இறந்துவருவது, கால்நடை விவசாயிகளை உருக்குலைய வைத்து வருகிறது. என்ன நடக்கிறது?

சிவகங்கையை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். ஒவ்வொரு வருடமும், டெல்டாவில் அறுவடை முடிந்ததுமே, தன்னுடைய ஆடுகளை அங்கு கொண்டு சென்று, மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாம்.

25 goats in Aruppukkotai and what happened to the Farmer Rajan near Virudhunagar in overnight

கால்நடைகள்: இவரை போலவே, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளவர்களும், தங்கள் கால்நடைகளை டெல்டா பகுதிக்கு அழைத்து சென்று ஆடுகளை மேய்க்க விடுவார்கள்..

அடுத்த சாகுபடி டெல்டாவில் ஆரம்பிக்கும்வரை, அங்கேயே தங்கியிருந்து இந்த ஆடுகளை இவர்களை மேய்த்து வருவார்கள்.. காரணம், கோடை காலங்களில் அறுவடை முடிந்து வயல்களில் இயற்கை உரத்தின் தேவைக்காக ஆடுகளை கிடை போடுவது வழக்கம்.. இதனால் ஆடுகள் போடும் கழிவுகள், வயல்களில் உரமாக படிந்து, சாகுபடி நேரத்தில் விளைச்சல் அதிகமாக இருக்குமாம்..

செம்மறி ஆடுகள்: இதற்காகவே, வெளி மாவட்டங்களில் இருந்து, நிறைய செம்மறி ஆடுகள் வரவழைக்கப்பட்டு, விவசாயிகள் தங்களுடைய வயல்களில் ஆடுகளை கிடை போட வைப்பார்கள். அப்படித்தான், இந்த வருடமும், நாகராஜ் தனக்கு சொந்தமான 200 செம்மறி ஆடுகளை, ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு மேய்ச்சலுக்காக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கிளம்பினார்..

கீழ்வேளூர் வட்டம் மணலூர் கிராமத்துக்கு நேற்றுமுன்தினம், லாரியில் 200 செம்மறி ஆடுகளை ஏற்றிக் கொண்டு கிளம்பினார். ஆனால், மணலூர் மேலக்கரை சாலை பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தபோது, மண்சாலையில், லாரி நிலைதடுமாறியது. அருகிலிருந்த வயலில் லாரி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த அனைத்து ஆடுகளுக்கும் லாரிகளுக்கும், வயலுக்கும் நடுவில் சிக்கி கொண்டன.

ஆடுகள்: அங்கிருந்தவர்கள் ஓடிவந்து ஆடுகளை மீட்டாலும், 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் அங்கேயே உடல் நசுங்கி இறந்துவிட்டன.. பலியான ஆடுகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

அதேபோல, தாழையூத்து தென்கலத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்.. இவரும் ஆடுகளை வளர்த்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்காக ஆடுகளை அனுப்பியபோது, திடீரென வாகனம் ஒன்று வேகமாக மோதியதில், மேய்ச்சலிலிருந்த 5 ஆடுகளுமே சம்பவ இடத்தில் இறந்துவிட்டன.

மேய்ச்சல்: நேற்றும் இதுபோலவே ஒரு துயரம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்துள்ளது. புளியம்பட்டி காட்டுப்பகுதியில் முதுகுளத்தூரை சேர்ந்த ராஜநல்ல கருங்கன் என்பவர், கிடை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். 20 ஆட்டுக்குட்டிகளை மட்டும் கிடையில் விட்டுவிட்டு மற்றவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், சாயங்காலம் வந்து பார்த்தபோது, கிடை முழுவதுமே எரிந்த நிலையில் ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி கிடந்தன.. உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ராஜநல்ல கருங்கன், மர்மநபர்கள் தன்னுடைய கிடையில் தீ வைத்ததாக புகார் தந்துள்ளார். கடந்த 2 நாட்களில் மட்டுமே நூற்றுக்கணக்கான ஆடுகள் இறந்துள்ளதும், கருகியிருப்பதும், விவசாயிகளை நிலைகுலைய வைத்துவருகிறது.

கலக்கம்: இது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கியிருக்கிறார்கள் என்றாலும், உயிரிழந்த ஆடுகளின் சடலங்களை பார்த்து, அந்தந்த ஆடு உரிமையாளர்கள் கதறி கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+