‛பற்றி எரிந்த உடல்’.. ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு.. யார் இவர்?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று திடீரென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை நீதிமன்றத்துக்கு விடுமுறையாகும். இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பு ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே தான் நீதிமன்றத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று நீதிமன்ற வளாகத்துக்கு பேக் ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். அவர் பேக்கை தனியே வைத்து கொண்டு சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.
இந்த வேளையில் திடீரென்று அவர் நீதிமன்ற வளாகத்தின் அருகே பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றியுள்ளதோடு, தீயை பற்ற வைத்து தீக்குளித்துள்ளார். இதை அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓடிவந்து அந்த நபரின் உடலில் பிடித்த தீயை அணைத்தனர். இருப்பினும் அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே தான் சம்பவம் குறித்து அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு இருந்த அவரது பேக்கை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (45) என்பதும், அவர் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் அவர் எதற்காக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் சந்திரசேகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் போலீஸ் நிலையங்ளில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரது தற்கொலை முயற்சிக்கு வழக்கு ஏதேனும் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications