சிவகாசியில் ஒரு வருடமாக 10ம் வகுப்பு மாணவனுடன் அத்துமீறி வந்த பவித்ரா டீச்சர்.. சிக்கியது எப்படி?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பவித்ரா என்ற டியூசன் ஆசிரியை 15 வயது மாணவனுடன் அக்கடி அத்துமீறி உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்த பெற்றோர், அவர் மீது போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் ஆசிரியை பவித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். எப்படி சிக்கினார் என்பது பற்றி பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயதாகும் பவித்ரா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்திருக்கிறார்.

இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் அடிக்ககடி எல்லை மீறியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மாணவனின் பெற்றோர், மாணவனை டியூசன் அனுப்புவதை நிறுத்தி உள்ளார்கள். ஆனாலும் டியூசன் ஆசிரியை, மாணவன் இடையே எல்லை மீறிய உறவு தொடர்ந்து வந்துள்ளதாம்.
இதனை கண்டுபிடித்த பெற்றோர், தனது மகனுக்கு தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆசிரியை பவித்ராவை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சென்னையிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை.. அதே பகுதியிலுள்ள துணிக்கடை ஒன்றில் இந்த பெண் வேலை பார்த்து வந்தார். அதே துணிக்கடையில் 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வருகிறார். ஒரே கடையில் பணிபுரிவதால், அந்த பெண்ணும், சிறுவனும் சகஜமாக பழகினார்கள்.. நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி உள்ளது.
ஒருகட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்கள். அத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்று 2 பேரும் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார்கள் ஒரு கட்டத்தில் இருவரும் திடீரென கல்யாணமும் செய்து கொண்டனர். இந்த விவகாரம் வெளியே வந்த நிலையில், 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17வயது மாணவனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்த 24வது இளம் பெண் அண்மையில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அந்த இளம்பெண் தனது வீட்டுக்கு மாணவரை அடிக்கடி வரவழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த மாணவர் அதற்கு சம்மதிக்க மறுத்து விட்டார்.தன்னை காதலித்துவிட்டு, தன்னோடு ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண், மாணவர் பயிலும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவரை இடைநீக்கம் செய்தார்கள். இந்த விவகாரம் அப்போதுதான் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த மாணவரின் தாயார், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டயாப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று பேர் இப்படி கைதாகி உள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications