அது இருக்கே .. நா கூசும் ஆபாச பேச்சு.. ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி புகார்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தன்னைப் பற்றியும் தன் உடல் அமைப்பை பற்றியும் நா கூசும் வகையில் அருவருக்கத்தக்க வகையில் பேசியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பெண் நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் மான்ராஜ். விருதுநகர் மாவட்டத்தின் ஒரே அதிமுக எம்எல்ஏவான இவர் தற்போது சர்ச்சை வளையத்தில் சிக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மான்ராஜ் ஒரு பெண் நிர்வாகியுடன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது அதில் மான் ராஜிடம் அந்தப் பெண் சொல்ல முடியாத வார்த்தைகளால் அருவருக்கத்தக்க வகையில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சையில் சிக்கிய எம்எல்ஏ
அதிமுக தொண்டர்கள் முதல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பிரமுகர்கள் செயல்பாடுகளை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் இருவரும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய எம்எல்ஏ மான ராஜ் பெண் நிர்வாகி ரீட்டா என்பவரது பெயரை குறிப்பிட்டு அவரது உடல் அமைப்பு குறித்து அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசினார். மேலும் அவரை தன்னோடு அனுப்பி வைக்குமாறும் கூறியது அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியது.

ஆபாசமாக பேசியதாக புகார்
இந்த நிலையில்தான் தன்னைப்பற்றி ஆபாச வார்த்தைகளால் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அந்த ஆடியோவில் பெயர் கூறப்பட்ட ரீட்டா புகார் அளித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மான்ராஜ் போட்டியிட்ட போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்த ரீட்டா என்ற பெண்மணி தேர்தல் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தான் தற்போது மான்ராஜ் மீது புகார் கூறியுள்ளவர்.

கொலை மிரட்டல்
மேற்சொன்ன உரையாடல்களை இன்னாசியம்மாள் சென்ற அதிமுக பெண் நிர்வாகியிடம் தான் மான்ராஜ் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ சில வெளியானது. அதில் எம்எல்ஏ மான்ராஜ் இன்னாசியம்மாளிடம் பேசும்போது ரீட்டா என்ற பெண்ணை பற்றி பேசிய ஆடியோவும் அடக்கமாகும். அதில் ரீட்டாவின் உடல் மற்றும் நடத்தைகளை பற்றி எம்எல்ஏ மான்ராஜ் பேசிய வார்த்தைகளை கேட்ட ரீட்டா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எம்எல்ஏ மனைவியும் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவருமான வசந்தி என்பவரிடம் ரீட்டா புகார் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரீட்டா விற்கு எம்எல்ஏ தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்
இதுகுறித்து அதிமுக தலைமையிடம் புகார் அளித்தும் பயனில்லை என்ற நிலையில் ஆன்லைன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்திற்கு ரீட்டா புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் எம்எல்ஏ தன்னை இழிவாக பேசியதால் தன்னால் வெளியில் நடமாட முடியவில்லை என்றும், இதனால் தன்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் ஆடியோ குறித்து ஏதும் வெளியானால் கொலை செய்துவிடுவதாக எம்எல்ஏ தரப்பு தன்னை மிரட்டி வருவதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ரீட்டா எம்எல்ஏவின் அவதூறு பிரச்சாரம் தன்னை தற்கொலைக்கு கொண்டிருப்பதாகவும் ஆகையால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications