விபத்து இல்லா பட்டாசு உற்பத்தி.. பயிற்சி அவசியம்.. பட்டாசு ஆலைகளுக்கு விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை
விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தி மையத்தில் ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறாத தொழிலாளர்களை கொண்டு பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் விபத்துகளும் உயிரிழப்புகளும் நேரிட்டு கொண்டுதான் உள்ளன. நித்திய கண்டம் என்ற நிலையில்தான் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிவகாசி அருகே செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார். காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதில் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்பை தடுக்க நன்கு பயிற்சி பெற்ற ஊளழியர்களை பணியமர்த்த பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நிர்ணயித்த காலத்துக்குள் பயிற்சியை முடிக்காமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தி மையத்தில் ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு 2-வது முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3ஆம் முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் ரூ.10,000 தண்ட கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், 4-ம் முறை கடிதம் எழுதியும் பயிற்சிக்கு வர தவறினால் சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயிற்சி முடிக்காத பட்டாசு ஆலை போர்மேன், கண்காணிப்பாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; பயிற்சிக்கு வரத் தவறினால் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications