”அதே ஸ்டைல்” அருப்புக்கோட்டை கோயிலுக்கு யானையை தானமாக வழங்கிய நடிகை திரிஷா!
விருதுநகர்: விலங்குகள் மீது தனி பிரியம் கொண்டுள்ள நடிகை திரிஷா, விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கி உள்ளார். நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான எந்திர யானையை கோவிலுக்கு வழங்கி உள்ளனர். 3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்றே பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. இந்த யானைக்கு கஜா என பெயரிடப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா விலங்குகள் மீது தனிப் பிரியம் கொண்டவராக உள்ளார். இவர் பீட்டா அமைப்பிலும் உள்ளார். இந்த நிலையில் நடிகை திரிஷா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கியுள்ளார்.

கோவிலுக்கு யானை வழங்கிய திரிஷா
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் பிரபல ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் ஜூலை 2 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக கோவிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகை திரிஷா இந்த கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கி உள்ளார். அச்சு அசலாக யானை போன்றே இந்த எந்திர யானை தோற்றமளிக்கிறது. 3 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இதன் எடை 800 கிலோ ஆகும். நிஜயானையை போன்றே கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த எந்திர யானைக்கு கஜா என்று பெயர் வைத்து உள்ளனர்.
ஜெயலலிதா பாணியில் திரிஷா
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கோவில்களுக்கு தானமாக யானை வழங்கி வந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோவிலுக்கு ஜெயலலிதா தானமாக சிமித்ரா என்கிற சுமி என்ற யானையை கொடுத்து இருந்தார். தற்போது இதே பாணியில் நடிகை திரிஷாவும் யானை வழங்கி வருவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அதே சமயத்தில் சிலர், திரிஷா பீட்டா அமைப்பில் இருப்பதனால் எந்திரத்தால் ஆன யானையை பரிசாக வழங்கியிருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
அச்சு அசலாகவே யானை போன்று தன் இரண்டு பெரிய காதுகளையும் ஆட்டிக்க்கொள்கிறது. தும்பிக்கையை மேலே தூக்குவது போன்றும், அவ்வப்போது வால்களை ஆட்டிக்கொண்டும் இருக்கிறது. இதேபோல் நிஜ யானை பக்தர்களுக்கு தும்பிக்கையால் ஆசி வழங்குவது போன்றும், தண்ணீரை பீய்ச்சியும் அடிக்கிறது. நேற்று இந்த யானையை கோவிலுக்கு வழங்கினர். அப்போது கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.
யானைகள் துன்புறத்தப்படுவதை தவிர்க்க
கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கூறுகையில், கோவில்களில் யானைகள் துன்புறத்தப்படுவதை தவிர்க்கவே தன்னார்வ அமைப்பு மற்றும் நடிகை திரிஷா இந்த எந்திர யானையை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்தனர். நடிகை திரிஷாவும், சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பினர் சேர்ந்து தான் இந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான எந்திர யானையை கோவிலுக்கு வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் முதல் முறையாக இதுபோன்ற எந்திர யானை கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே தன்னார்வ அமைப்பு கேரளாவில் உள்ள கோவிலுக்கு வழங்கியிருந்தது. இதுபற்றி பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா குழுவினர் கூறியதாவது:-
எந்திரத்தால் ஆன முதல் யானை
இதுபோன்ற ஒரு எந்திர யானையை கேரளாவில் உள்ள கோவிலுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கினோம். இந்த யானைக்கு இரிஞ்சாடப்பில்லி ராமன் என்று பெயர் வைத்திருந்தோம். இது தான் உலகின் முதல் எந்திர யானையாகும். இதையடுத்து தான் தற்போது கஜா என்ற இந்த எந்திர யானையை முதல் முறையாக தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு வழங்கி இருக்கிறோம்.
கேரளாவில் தான் இந்த யானை தயாரிக்கப்பட்டது. உயிருள்ள யானைக்கு பதிலாக இந்த எந்திர யானையை பயன்படுத்துவதால் யானைகள் துன்புறுத்தப்படுவது தவிர்க்கப்படும். இப்போது தமிழகத்தில் உள்ள 29 கோவில்களில் யானைகள் உள்ளன. எந்திர யானைகள் பயன்படுத்தப்படும் போது யானைகள் துன்புறுத்தல் தவிர்க்கப்படும், திருச்செந்தூரில் பாகன்களை யானை கொன்றது போன்ற நிகழ்வுகளும் தடுக்கப்படும் என்று கூறினர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications