அதைச் செய்ய முதுகெலும்பு இருக்கா? ‘கபர்தார்’ - திமுக எம்பி கருத்தால் கொந்தளித்த எச்.ராஜா!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர் : மசூதிகளையும், தேவாலயங்களையும் அரசு கையில் எடுத்து மத அறநிலையத்துறையைக் கொண்டு வர வேண்டும். அதற்கு முதுகெலும்பு இருக்கிறதா? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு நிகழ்ச்சி ஒன்றில் பூமி பூஜை நடத்தப்பட்டதற்கு தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் எதிர்ப்புத் தெரிவித்ததற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசு விழாக்களில் இந்து சம்பிரதாய நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களையும் அழைத்து நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது என்று செந்தில்குமார் எம்.பி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

 திமுக எம்.பி செந்தில்குமார்

திமுக எம்.பி செந்தில்குமார்


தருமபுரி மாவட்டத்தில் ஆலாபுரம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்றார். அங்கு இந்து மதம் சார்ந்த சடங்குகள் மட்டும் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கோபமாக பேசினார். அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் இருக்கிறது என கோபமாகப் பேசினார். இது தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டார்.

கருத்தால் சர்ச்சை

கருத்தால் சர்ச்சை

இந்து மதம் சார்ந்த பூஜை மட்டும் நடத்துறீங்க, சர்ச் பாதரையும் கூப்பிடுங்க, மசூதி இமாமை கூப்பிடுங்க என திமுக எம்.பி செந்தில் குமார் பேசியது இணையத்தில் பரவியது. தருமபுரி எம்.பி செந்தில்குமாரின் இந்த செயலுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், இந்த விவகாரத்தில் திமுக அரசையும் கடுமையாகச் சாடினார்.

எச்.ராஜா

எச்.ராஜா

செய்தியாளர் சந்திப்பில் பேசிய எச்.ராஜா, "தருமபுரியில் தமிழே பேசத்தெரியாத ஒரு எம்.பி இருக்கிறாரே.. ‘நம்மிள் சொல்றான்.. நிம்மிள் செய்றான்' என்று பேசுவாரே.. அவர் சொல்கிறார் அரசு விழாவில் எதற்கு இந்து முறைப்படி பூஜை என்று. அரசாங்கத்தின் கையில் இந்து கோயில்கள் இருக்கும்போது, அரசு விழாக்களில் இந்து தர்மப்படிதான் பூஜை நடக்கவேண்டும். வேறு எந்த முறைப்படியும் பூஜை நடக்கக்கூடாது.

மசூதி, சர்ச்சை கையில் எடுங்க

மசூதி, சர்ச்சை கையில் எடுங்க

என் கோவில்களை வைத்திருக்கும் அரசாங்கம், இந்துக்களுக்கான அரசாங்கம் தான். எல்லோருக்குமான அரசாங்கம் என்று அவர் சொல்கிறார் என்றால், மசூதிகளையும், தேவாலயங்களையும் அரசு கையில் எடுத்து மத அறநிலையத்துறை கொண்டு வர வேண்டும். அதற்கு முதுகெலும்பு இருக்கிறதா? திமுகவில் இந்து எதிர்பார்ப்பாளர்கள் தலையெடுத்துத் திரிகிறார்கள். கபர்தார். இந்துக்கள் உங்களை சும்மா விட மாட்டோம் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்." எனத் தெரிவித்தார். (ஒருமையில் அவர் பேசியவை திருத்தப்பட்டுள்ளன)

டென்ஷனான எச்.ராஜா

டென்ஷனான எச்.ராஜா

மேலும், செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த எச்.ராஜா, "நீங்க யாரு? எதுக்கு ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குறீங்க? நீங்க எல்லாரும் அறிவாலயத்தின் கைக்கூலிகள். நான் சொல்றத ரிப்போர்ட் பண்ணுறதுதான் உங்க வேலை." என்கிற ரீதியில் பேசிக்கொண்டே சென்றார். செய்தியாளர்கள் தரப்பிலிருந்தும் பதில் வர, தொடர்ந்து வாக்குவாதம் நீடித்தது.

Recommended Video

    பூமி பூஜையால் பொங்கிய திமுக எம்பி செந்தில்குமார்..
     வாக்குவாதம்

    வாக்குவாதம்

    தொடர்ந்து எச்.ராஜா "நான் பேசுவது அனைத்தும் செய்தியாக வரவேண்டும். வராவிட்டால், அந்தச் சேனலை நடத்துபவர்கள் இந்து விரோதிகள்" எனத் தெரிவித்தார். எச்.ராஜாவின் இந்தப் பேச்சுக்கு செய்தியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவே, "நீங்க யாராக வேண்டுமானாலும் இருந்துட்டுப் போங்க..' என்று மழுப்பலாகப் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+