“வாங்க வாங்க.. வாக்காளர்களுக்கு வடை சட்டி வழங்கும் அமைச்சருக்கு வந்தனம்” - பாஜக போஸ்டரால் பரபரப்பு!
விருதுநகர் : அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆன கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், வாக்காளர்களைச் சந்தித்து நன்றி கூறி வருகிறார்.
Recommended Video
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக வடை சட்டிகள் (வாணலிகள்) வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றாத வருவாய்த்துறை அமைச்சர்
வாக்காளர்களுக்கு வடைசட்டி வழங்கி வந்தனம் செய்கிறார் என பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன்
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து பரிசுப்பொருள் வழங்கி வருகிறார்.

அருப்புக்கோட்டை
அந்தவகையில் இன்று பாளையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார். அமைச்சரின் சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக வாணலிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாஜக போஸ்டர்
இந்நிலையில் பாளையம்பட்டி விரிவாக்கப்பகுதி முழுவதும் அமைச்சரின் வருகை தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில், "வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லாத வருவாய்த்துறை அமைச்சர் 'வடை சட்டி' வழங்கி வாக்காளர்களுக்கு வந்தனம் செய்கிறார். அன்னாரின் வருகையை பாரதிய ஜனதா கட்சி வாழ்த்தி வரவேற்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பு
இந்த போஸ்டர்கள், விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியினரால் அனைத்து வீதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வாக்காளர்களுக்கு நன்றி கூற வரும் இடங்களில் இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications