விருதுநகர் அருகே கொடூரம்.. அரசு பள்ளி நீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு.. போலீசார் தீவிர விசாரணை
விருதுநகர்: விருதுநகர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் நீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது யார் என போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன் பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீருக்காகவும் சமையல் உள்ளிட்ட வேலைகளுக்கு பயன்படுத்தவும் சிண்டெக்ஸ் டேங்க் ஒன்று உள்ளது. பள்ளி அருகே உள்ள இந்த சிண்டெக்ஸ் தொட்டி உள்ளது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் பள்ளிக்கு யாரும் வரவில்லை. இன்று காலையில் மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி செய்வற்கான ஏற்பாடுகளை செய்ய நேற்று இரவு சமையல் செய்யும் வேலையில் ஈடுபடும் பெண்கள் பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த சிண்டெக்ஸ் தொட்டியை திறந்து தண்ணீர் பிடித்து இருக்கிறார்கள். இதில், தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள், உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்த போது மாட்டுச்சாணம் இருந்துள்ளது. உடனடியாக சமையல் வேலையில் ஈடுபடும் பெண்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தலைமை ஆசிரியர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அதில் மாட்டுச்சணம் கலந்து இருந்தது. இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சமையலுக்கு பயன்படுத்தபடும் நீரில் மாட்டுச்சாணம் கலந்தது யார் என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் பசியாற காலை சிற்றுண்டி திட்டத்தை அண்மையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விரிவுப்டுத்தி உத்தரவிட்டார்.
இதன்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் சமையலுக்கு பயன்படுத்தப்படும் நீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications