இளையராஜா கருத்தை ஒரு போதும் ஏற்க முடியாது! இந்திய கம்யூனிஸ்ட் மிகத் திட்டவட்டம்!
விருதுநகர்: அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா தெரிவித்த கருத்தை ஒரு போதும் ஏற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இளையராஜா தனது ஆரம்பக்காலத்தில் அண்ணன் பாவலருடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் கச்சேரி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது;

இளையராஜா கருத்து
''இளையராஜா சிறந்த இசையமைப்பாளார், இசை அமைப்பதில் சிறந்த ஞானி. இளையராஜாவின் வளர்ச்சியை கண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெருமிதம் கொள்கிறது. ஆனால் அதற்காக அம்பேத்காருடன் மோடியை அவர் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் பதவி என்பது மிக உயரிய பதவி ஆகும். அந்த பதவிக்கு உரிய மதிப்பளித்து அலங்கரிக்கக் கூடிய வகையில் ஆளுநர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.''

தேநீர் விருந்து
''ஆளுநரின் தேநீர் விருந்தை அரசும், அனைத்து கட்சிகளும் புறத்கணித்தது சரி தான். நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் சட்டங்களும் அனுகு முறையிலும் இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் நியாயமாக மக்களுக்கு கிடைக்க ஒன்றிய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.''

விலைவாசி உயர்வு
''இலங்கையில் ஏற்பட்டு உள்ள விலைவாசி உயர்வை கண்டித்தும் அரசை ராஜினாமா செய்யக்கூறியும் கடந்த 10 நாட்களாக மக்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். அங்கு அரசின் அடக்குமுறைகள் வெற்றி பெறவில்லை. இலங்கையில் சிங்களர் தமிழர் என பாகுபாடு இன்றி அனைவரும் ராஜபக்க்ஷே குடும்ப அரசை கண்டித்து போராடி கொண்டு இருக்கிறார்கள். இலங்கையில் நடைபெறும் போராட்டம் போல் இந்தியாவில் நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகாது.''

மதங்களின் பெயரால்
''விலைவாசி உயர்வு பிரச்சனையை திசை திருப்ப மதங்களின் பெயரால் நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. உள்துறை அமைச்சர் அனைவரும் இந்தியை பேச வேண்டும் இந்தியை படிக்க வேண்டும் என்று சர்வாதிகார போக்குடன் உத்தரவு போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் பாஜகவை காலுன்றாமல் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் இந்திய கம்யூனிஸ்ட் மேற்கொள்ளும்.''

25 -வது மாநில மாநாடு
''ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 9-ம் தேதி வெள்ளையனே வெளியேறு தினமான அன்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு மோடி அரசே வெளியேறு என்ற முழுக்கத்துடன் பேரணி நடைபெறும்.''
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications