சாத்தூர் பட்டாசு ஆலை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
சாத்தூர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 19 பேர் இறந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வனராஜா என்பவர் மரணமடைந்துள்ளார்.
சாத்தூர் அருகே உள்ளது ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரிக்கு சொந்தமான அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்குகிறது இந்த ஆலை.

இங்கு 35-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் வழக்கம்போல் அந்த ஆலையில் பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வந்தன. அப்போது ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது.
தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியது. இதனால் அநத 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்தின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகிவிட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 பேர் பலியாகிவிட்டனர். மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வனராஜா என்பவர் மரணமடைந்ததால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications