ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்!
விருதுநகர்: ரூ.8000 கூப்பன் வழங்குவோம் என அறிவித்தது எதனால் என்பது குறித்து திமுக எம்பி கனிமொழி பிரச்சாரத்தில் விளக்கியுள்ளார். மேலும் அவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேட்பாளருமான தங்கம் தென்னரசுவை ஆதரித்து, திருச்சுழி - காரியாபட்டி, நரிக்குடி, அருப்புக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: நான் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்கிறேன் என்பதற்காக, அவர் தரம் தாழ்ந்து என்னை குறிவைத்து பேசுகிறார்; "நீங்கள் மீண்டும் சிறைக்கு செல்வீர்கள்" என்று கூறுகிறார்.
எடப்பாடி பழனிசாமி அவர்களே, ஒன்றே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். என் மீது பொய் வழக்கு போடப்பட்டது உண்மை. அந்த வழக்கை நான் எதிர்கொண்டு, என் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறேன்.

நான் நினைத்திருந்தால் என்னை தவறாக சித்தரித்து சிறையில் வைத்ததற்காக, வைத்தவர்கள் மீது வழக்கு போட்டு இருக்கலாம். ஆனால், நான் குற்றமற்றவளாக விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.என் மீதான வழக்கு நிலுவையில் இல்லை; அது மேல்முறையீட்டில் உள்ளது. இந்த இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றவர் யார் என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீது நிறைய வழக்குகள் உள்ளன; அதை அவர் நினைவில் வைத்திருந்தால் போதும்.
என்னை பார்த்து சொல்கிறார், தொடர்ந்து இப்படி பேசி கொண்டிருந்தால் சிறைக்கு செல்ல வேண்டியதாகிவிடும் என்று. நான் கேட்கிறேன்? உங்களை எதிர்த்து பேசினால் சிறைக்கு போவீர்கள் என்று மிரட்டுவீர்களா? இதையே தான் பாஜக செய்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியில் உள்ளவர்களின் மீது சிபிஐ, வருமானவரி துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் வழக்குகள் ஏவப்படுகின்றன. உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதனால்தான் நாம் சொல்கிறோம். அண்ணா திமுகவை, அமித்ஷா திமுகவாக மாற்றிவிட்டார்கள் என்று.

எடப்பாடி பழனிச்சாமி என்னை மிரட்டப்பார்க்கிறார். நான் அவருக்கு சொல்கிறேன், நான் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் மகள்; இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் நான் அஞ்சப்போவதில்லை. பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்காதீர்கள்.
உங்களைப் போன்ற 100 பேரை வென்ற கலைஞரின் மகள் நான். தந்தை பெரியாரின் பாசறையில் இணைந்து அரசியலுக்கு வந்த ஒருவராக நான் இருக்கிறேன். நீங்கள் மிரட்ட மிரட்ட, நான் இன்னும் அதிகமாக பேசுவேன். என்னை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள். தவறான விஷயங்களை பேசாதீர்கள் என்று பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், திமுக அறிவித்த 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் வாக்குறுதி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் பிரிட்ஜ் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
வீட்டில் ஏற்கெனவே ஒரு பிரிட்ஜ் இருந்தால், இன்னொரு பிரிட்ஜை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால்தான், தமிழக முதல்வர் ஸ்டாலின், "நான் 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் கொடுக்கிறேன். உங்கள் வீட்டில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் என எந்த பொருள் தேவைப்படுகிறதோ அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications