விடாமல் பெய்யும் கனமழை.. சதுரகிரி கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து! பக்தர்கள் ஏமாற்றம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரதோஷம், பவுர்ணமி காரணமாக 24ம் தேதி முதல் 27ம் தேதி மலையேற ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்கு வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோயிலுக்கு செல்ல வருடத்தின் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். காரணம் இக்கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் காட்டாறுகள்தான். இந்த ஆறுகளை கடந்துதான் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியும். வழக்கமாக இந்த ஆறுகள் வறண்டு காணப்பட்டாலும் திடீரென பெய்யும் மழை காரணமாக எதிர்பாராத வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவேதான் இங்கு வனத்துறையினரின் கண்காணிப்பு அதிகம்.
தற்போதைய நிலையில் தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சதுரகிரி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட இருக்கிறது. இது தவிர மண் சரிவும் ஏற்படலாம். எனவே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications