அறநிலையத் துறைக்குள் வந்து முதல்வர் கூட கேட்க முடியாது.. நீங்க யாரு? சீறிய ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அறநிலையத்துறைக்குள் வந்து கேள்வி கேட்க முதல்வருக்கு கூட உரிமை இல்லை என சட்டம் இருக்கிறது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்ரீசடகோபராமானுஜர் கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு செல்லும் பக்தர்களிடம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இடையே மோதல் ஏற்பட்டது. செண்பகத்தோப்பு பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் இருக்கும் நிலையில், அப்பகுதிக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

Even the Chief Minister has no right: says Srivilliputhur jeeyar

இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பீடாதிபதி ஶ்ரீ சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஶ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பகத்தோப்பு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது.

எந்த அடிப்படையில், யாரிடம் அனுமதி பெற்று பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள் என தெரியவில்லை. யார் இதற்கு உரிமை கொடுத்தது? செண்பகத்தோப்பு பகுதியில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான 250 ஏக்கருக்கும் அதிகமான நிலம் உள்ளது. அந்த இடத்தில் வாகனம் நிறுத்துவதற்கு அறநிலையத்துறை வசூலிக்கும் கட்டணமும் தங்களுக்கு வேண்டும் என வனத்துறை கேட்கிறது.

இதுவரை பக்தர்களிடம் வனத்துறை வசூலித்த பணம் எவ்வளவு, அது என்ன ஆனது என்பதை அரசுக்கு வனத்துறை அறிக்கையாக அளிக்க வேண்டும். அறநிலையத்துறைக்கு சொந்தமானதை முதல்வர் கூட கேட்க முடியாது என்ற சட்டம் உள்ளது. அப்படி இருக்கும்போது அறநிலையத்துறை பணத்தை வனத்துறை கேட்பது குற்றம்.

சுற்றுச்சூழலை பராமரிக்க மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி என்ன ஆனது என தெரியவில்லை. வனப்பகுதிகளில் தான் மக்களின் குல தெய்வ கோயில்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது வனப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு செல்வதற்கு பாதை வசதி கூட இல்லை. ஆனால் வனப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமாம். வனத்துறையின் செயல்பாடு இந்து மக்களை கோயிலில் வழிபாடு செய்ய விடாமல் தடுத்து, இந்து தர்மத்தை அழிக்கும் சதித்திட்டம் போல தெரிகிறது.

பண வசூலில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். பொங்கலுக்குள் அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்களை திரட்டி வனத்துறை அலுவலகத்தில் அமர்ந்து தர்ம வழியில் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+