Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"1 நம்பர்".. ஆறுமுகம் வந்தாச்சே.. திகைத்து பார்க்கும் அதிமுக, திமுக, பாஜக, அமமுக.. யாரிந்த வேட்பாளர்

இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் பிரச்சாரம் துவங்கியது

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: வரப்போகும் இடைத்தேர்தலில், தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் போட்டியிட உள்ளார். இதற்கான பிரச்சாரத்தையும் முதல்நபராக ஆறுமுகம் தொடங்கி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கீழராஜ குலராமன் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராக உள்ளார்.. மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருபவர்.

அதேபோல, தேர்தல் சமயங்களில் பெரிய பெரிய கட்சிகளுடன் மோதி களம் காண்பவர்.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் போட்டியிட பலரும் விருப்பமும் தெரிவிப்பார்கள்..

செல்லபாண்டியன்

செல்லபாண்டியன்

தங்கள் கட்சி மீதான விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், மது குடிப்போர் சங்கம் தொடர்ந்து, தங்களின் கருத்துகளை தெரிவித்துவருகிறது.. "கொள்கையில்லா கூட்டணியை எந்தக் கட்சிகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம்... ஆனால், குவார்ட்டர் இல்லாத கூட்டத்தை எந்தக் கொம்பனாலும் கூட்ட முடியாது. தமிழ்நாட்டில், இப்படை தோற்கின் எப்படை வெல்லும். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்" என்று மது குடிப்போர் சங்க மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் அடிக்கடி கூறிவருவார்..

டாஸ்மாக்

டாஸ்மாக்

ஆனால், வேட்பு மனுவை தாக்கல் செய்ய கையில் டெபாசிட் தொகை இல்லை என்பதால், டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்பனை செய்து, அதன்மூலம் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது இந்த கட்சியின் இயல்பாக இருந்து வருகிறது.. சில நாட்களுக்குமுன்புகூட, அரசு டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை போதைப்பொருள் என்று நிரூபித்து கெஜட்டில் வெளியிட வைத்தால் ஒரு லட்சம் பரிசு தருவதாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது..

கெஜட்

கெஜட்

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறங்குவதாக அறிவித்துள்ளது... தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இடைத்தேர்தல் குறித்த முடிவை அறிவிக்காததற்கு முன்பு, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அந்த தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லி வேட்பாளரையே அறிவித்துவிட்டது.. அவர் பெயர் எம்.எஸ்.ஆறுமுகம்.. இவர், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆவார்.. "காலி பாட்டில்கள் தான் எங்களுக்கு நிதி, டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தான் எங்களுக்கு கதி" என்ற முழக்கத்தோடு காலிபாட்டில்களை பொறுக்க போவதாகவும் ஆறுமுகம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

 காலி பாட்டில்

காலி பாட்டில்

இந்நிலையில், காலிபாட்டில்களை பொறுக்கும் பணியை ஆறுமுகம் கையில் எடுத்துள்ளார்.. பஸ் ஸ்டாண்டு அருகே டாஸ்மாக் கடையிலிருந்து வினோதமான முறையில் பரபரப்புரையையும் தொடங்கினார். இதை பற்றி ஆறுமுகம் சொல்லும்போது, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இதற்காக பாட்டில் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். தேர்தலில் போட்டியிட வைப்பு தொகை கட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையாக சென்று கடைக்கு வெளியே உள்ள காலி மதுபான பாட்டில்களை சேகரித்து வருகிறேன்.

 10 ரூபாய்

10 ரூபாய்

இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைக்கு கட்ட முடிவு செய்துள்ளேன். மேலும் மது குடிக்க வரும் மது பிரியர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன். அரசுக்கு அதிமான வருவாயை தருபவர்கள் மதுப்பிரியர்கள்.. தேர்தலில் வெற்றி பெற்றால் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதை தடுப்பேன். மதுவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விதவைப் பெண்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்க சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்" என்று உறுதியுடன் சொல்கிறார் ஆறுமுகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+