சத்தான உணவை சாப்பிடுங்கள்... அரசுப் பள்ளியில் உணவு திருவிழா கோலாகலம்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு நடுநிலைபள்ளியில் உணவு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இயற்கை உணவின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக இயற்கை உணவின் அவசியத்தை வலியுறுத்தி உணவுத் திருவிழா நடைபெற்றது.

இதில் தென்னை, வாழை, காய்கறிகள் என ஏராளமான இயற்கை விவசாய பொருள்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் மற்ற பள்ளி மாணவர்களும் உணவு திருவிழாவில் கலந்து கொண்டனர்.

சத்தான உணவு வகைகளையே உண்ணப் பழகுவது, இயற்கை உணவின் அவசியத்தை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தனர்.

விவசாயத்தை போற்றும் வகையில் தாணிய வகைகள் காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள் பல்வேறு விதமாக செய்து இருந்த உணவு வகைகள் மற்றும் மாணவர்கள் தங்களின் அறிவு திறனை வளர்ப்பதற்க்கான நூலகங்கள் உள்ளிட்டவைகள் உணவு திருவிழாவில் இடம் பெற்று இருந்தன. அரசு பள்ளி மாணவர்களின் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை பெற்றோர்கள், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.













Click it and Unblock the Notifications