விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்களுக்கு 5%.. திமுகவுக்கு 95%! ’இது’ தான் இப்போ நடக்குது! பழைய பாஃர்முக்கு வந்த ராஜேந்திர பாலாஜி!

Google Oneindia Tamil News

விருதுநகர் : 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததால் சைலன்டாக ஒரு எதிர்ப்பு அலை வீசும். எங்களுக்கு 5 % வீசியது. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடத்தில் 95% எதிர்ப்பலை வீசுகிறது எனவும், திமுக ஆட்சியில் சரக்கடித்தால் கூட ஏற மாட்டிக்குது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சித்தூரில் காகித ஆலையில் தீவிபத்து.. தந்தையுடன் பர்த்டே கொண்டாட இருந்த மகன் உட்பட 3 பேர் பலிசித்தூரில் காகித ஆலையில் தீவிபத்து.. தந்தையுடன் பர்த்டே கொண்டாட இருந்த மகன் உட்பட 3 பேர் பலி

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பாலாஜி," புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் அண்ணா என்ற ஒருவர் நமக்கு தெரிந்திருக்க மாட்டார். தைப்பொங்கலுக்கு ஏழை,எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை திட்டத்தை அறிவித்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள்.நெசவாளர்களின் துயரத்தையும் தீர்ப்பார்.ஏழை மக்களின் துன்பத்தையும் தீர்ப்பார் எம்ஜிஆர். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி குழந்தைகளுக்கு சத்துணவு,செருப்பு,உடை,பள்ளி கட்டிடங்கள் கொடுத்து கல்வி புரட்சியே உருவாக்கிய தலைவன் எம்ஜிஆர் அவர்கள்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் க்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி சைக்கிள்,மடிக்கணினி, நோட்டு புத்தகங்கள், பள்ளிச் சீருடை, கொடுத்து உயர்கல்வி வகுப்பில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா அவர்கள். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பின்பு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் படிக்கிற மாணவர்கள் உயர்கல்வியோடு நின்று விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டி கொடுத்தவர் எடப்பாடியார் அவர்கள். திமுக என்ன செய்தது இதை செய்கிறேன் அதை என வந்து எதும் செய்யவில்லை.திமுகவினரே இந்த ஆட்சி எப்போது போகும் என கூறுகிறார்கள்.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சியில் 100 ரூபாய்க்கு விற்ற குவார்ட்டர் இப்போ 150 ரூபாய். கவன்ட்மென்ட் சரக்கு இல்லை கரூர் சரக்கு போலி சரக்கு. புதிய மின் இணைப்பு வாங்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் 5000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது இந்த விடியா ஆட்சியில். அதிமுக ஆட்சியில் மின்சாரத்தை உயர்த்தினால் எனது உடம்பில் மின்சாரம் பாய்கின்றது என்று சொன்னவர் ஸ்டாலின். வீட்டுக்கு முன்பு கருப்பு கொடியை பிடித்து போராட்டம் பன்னவர் ஸ்டாலின். கடந்த அதிமுக ஆட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி,மின்சார வரி, சொத்து வரி உள்ளிட்ட எந்த வரிகளும் கூட்டப்படவில்லை. தற்போது ஆட்சியில் அனைத்து வரிகளையும் கூட்டிவிட்டு பொதுமக்களை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். முக தலைவர் ஸ்டாலின் மட்டும் லட்டு சாப்பிடுகிறார்.நாம் கசப்பை சாப்பிடுகிறோம்.

95% எதிர்ப்பலை

95% எதிர்ப்பலை

கரண்ட் இல்லை ஆனால் கரண்ட் பில் கூடும் கேட்டால் கரண்ட் கட் பண்ணுவார்கள். அணில் ஓடினது என கண்டுபிடித்த விஞ்ஞானி அமைச்சர் செந்தில் பாலாஜி. கலைஞர் மகன் என்ன செய்வார் என்று நினைத்து பொதுமக்கள் ஓட்டு போட்டார்கள் இனி பேசி என்ன ஆகப்போகிறது மக்கள் படுகின்ற கஷ்டத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும் கடைசியில் ஓட்டு போட்ட மக்களை தெருவில் விட்டு விட்டனர் திமுக.அதிமுக இருக்கும் வரை மக்கள் பாதிக்கும் செயலை விட மாட்டோம். அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என நினைத்தோம்.10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததால் சைலன்டாக ஒரு எதிர்ப்பு அலை வீசும். எங்களுக்கு 5 % வீசியது. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடத்தில் 95% எதிர்ப்பலை வீசுகிறது" என பேசினார்.

English summary
Former minister Rajendra Balaji has said that last 10 years in power, admk have 5 % against . but dmk has 95%. now DMK regime is under pressure, it will get stuck.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X