டிரேட் மார்க் புன்னகையில் இ.பி.எஸ்.. காலை தொட்டு வணங்கிய ராஜேந்திர பாலாஜி.. கட்சியினர் நெகிழ்ச்சி!
விருதுநகர்: செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிந்து விட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

அதிமுக சுறுசுறுப்பு
இருப்பினும் மற்ற கட்சிகளை விட அதிமுக சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்சியில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஏற்கனவே பா.ம.க கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதால் பல இடங்களில் பாஜக-அதிமுக போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய நேற்று முதல் களமிறங்கினார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் நேற்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சிறப்பான வரவேற்பு
இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்லும் விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல் சூரன் பட்டி விலக்கில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசி பெற்றுக் கொண்டார்
எடப்பாடி பழனிசாமி தனது வழக்கமான டிரேட் மார்க் புன்னகையுடன் வரவேற்பை ஏற்றுக்கொண்டனர். அப்போது முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும்., அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமியின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றுக் கொண்டார். இதனால் அங்கு நின்ற அ.தி.மு.க.வினர் நெகிழ்ந்து போயினர். ''ஆட்சியில் இல்லாதபோதும்முன்னாள் முதல்வர் மீது முன்னாள் அமைச்சர் நல்ல மரியாதை வைத்துள்ளாரே'' என்று கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications