விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விருதுநகர் அருகே சதானந்தபுரத்தில் பத்திரகாளி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த நான்கு பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து வசக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசி அருகே சதானந்தபுரத்தில் என்பவருக்கு ராஜா என்பவருக்கு சொந்தமான பத்திரகாளி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 80 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ரசாயன கலவை செய்யும் பணியின் போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி ஆதிலட்சுமி 25 , ராமர் என்பவரது மனைவி சாந்தி 35, ராமச்சந்திரன் என்பவரது மனைவி முத்துமாரி,37 ஆகிய 3 பேரும் மற்றும் ஐயம்பட்டியைச் சேர்ந்த தளபதி என்பவரது மகன் சுந்தரபாண்டி 46 என்பவரும் படுகாயமடைந்தனர். காயமடைந்த நான்கு பேரும் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது.

சம்பவம் குறித்து வசக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் மற்றும் வருவாய்த்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி ஆதிலட்சுமி,25 என்பவர் மட்டும் 100 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 2 மாதங்களில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் 8வது பட்டாசு ஆலை வெடி விபத்து என்பதும் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications