செம ஹேப்பி நியூஸ்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவி சார் குறியீடு.. இனி விற்பனை அதிகரிக்கும்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Geographical indication has been given to Srivilliputhur Palkova

    ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் தயாராகும் உலகப்புகழ் பெற்ற பால்கோவாவிருக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், ஆன்லைன் மூலமாகவும் பால்கோவா விற்பனை அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    ஸ்ரீ ஆண்டாள் அவதரித்து சுற்றுலா தளமாகவும் தமிழகத்தின் முத்திரை சின்னமாகவும் விளங்ககூடிய ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றுமொரு சிறப்பு உலகபுகழ் பெற்ற பால்கோவா. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்ரீ ஆண்டாளை தரிசித்து செல்வது எவ்வளவு முக்கியத்துவமாக கருதுகிறார்களோ அதே அளவிற்கு இங்கு தயாராகும் பால்கோவாவை வாங்கி செல்வதை பெருமையாக கருதுகிறார்கள்.

    ஆகையால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் எங்கு பார்த்தாலும் பால்கோவா கடைகளே அதிகம் காணப்படுகின்றது. இங்கு தயாராகும் பால்கோவா தனிச்சிறப்பு வாய்ந்ததற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் அடிவாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளதால் இப்பகுதியில் உள்ள கறவை மாடுகளுக்கு மலை பகுதியில் விளையும் பசுமையான புல்களே உணவாக தரப்படுகிறது.

    பசும் புல்

    பசும் புல்

    மலைபகுதியில் விளையும் புல் களை உண்பதால் மாடுகளில் இருந்து பெறப்படும் பால் சுத்தமாகவும் கெட்டியாகவும் உள்ளது. மேலும் இங்கு தயாராகும் பால்கோவா வணிகத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே தயார் செய்யப்படுகிறது. கடந்த 1௦௦ ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரகணக்கான கறவைமாடுகள் வளர்க்கப்பட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பாலினை அந்த காலகட்டங்களில் பதபடுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் பாலினை காய்ச்சி அதை உணவாக சாப்பிடும் நிலை உருவானது.

    எப்படி வந்துச்சு பால் கோவா

    எப்படி வந்துச்சு பால் கோவா

    காலப்போக்கில் இதுவே பால்கோவா உருவாக காரணமாக அமைந்தது. அதிகமாக பால்கோவா தயாரித்தவர்கள் மீதமுள்ள பால் உணவை அருகில் இருக்ககூடிய வீடுகளுக்கு பண்டமாற்று முறையில் விற்பனை செய்து தங்களுக்கு தேவையான பொருள்களை அவர்களிடம் இருந்து பெற்று வந்தனர். இம்முறையே வளர்ச்சி கண்டு கடந்த 5௦ ஆண்டுகளுக்கு முன்பாக பால்கோவா செய்யும் தொழிலாக மாறியது. முதலில் குடிசை தொழிலாக செய்யப்பட்டுவந்த இத்தொழிலே காலபோக்கில் வளர்ச்சி கண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிருக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது .

    செய்வது எப்படி

    செய்வது எப்படி

    பாலினால் செய்யப்படும் இந்த பால் உணவு பால்கோவா, பால் அல்வா, இனிப்பு இல்லா பால்பேடா என மூன்று வகைகளில் தயாராகிறது. 3 கிலோ அளவிருக்கு பால்கோவா செய்வதற்கு 10 லிட்டர் பால் ஊற்றப்படுகிறது. பால் ஊற்றிய சற்று நேரத்தில் 1.1/4 கிலோ சீனி அதில் சேர்க்கப்பட்டு அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். சுமார் 3௦ நிமிடம் கழித்து கொதித்த பாலானது அடங்கி பாதி திட நிலைக்கு மாற ஆரம்பிக்கும் போது சிறிதுநேரம் அகப்பை மூலம் கிளறிவிட்டு பின்பு தயாரான பால்கோவாவை சிறிய தட்டிற்கு மாற்றி உலர வைத்தால் சுவையான பால்கோவா தயாராகிவிடும்.

    மக்கள் ஹேப்பி

    மக்கள் ஹேப்பி

    சீனியின் அளவை கூட்டினால் பால்கோவாவின் சுவை மாறி உண்ணமுடியாமல் போகும். மேலும் ஒரு சில உற்பத்தியாளர்கள் இயற்கை பொருள்களை பயன்படுத்தும் விதமாக நாட்டு சர்க்கரை மூலமும்உற்பத்தி செய்யபடுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்ததாக தயார் செய்யப்படும் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதை பால்கோவா உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+