விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊதிய உயர்வு கேட்டு போராடும் ஒருசிலர் எங்க.. சொந்த செலவில் பட்டாசு வாங்கி கொடுத்த ஜெயக்குமார் எங்க!

Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகரில் மாணவர்களுக்கு சொந்த செலவில் பட்டாசுகள், புத்தாடைகளை தலைமை ஆசிரியர் பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு தலைமை ஆசிரியராக உள்ளவர்ஜெயக்குமார் ஞானராஜ். இவர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு, யோகா, கராத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசை

ஆசை

இங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலிகள் ஆவர். இதனால் தீபாவளிப் பண்டிகையை அவர்களுடன் கொண்டாட ஆசைப்பட்டார்.

தலைமை ஆசிரியர்

தலைமை ஆசிரியர்

ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை தனது சொந்த செலவில் வாங்கி வந்து அவற்றை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கையால் குழந்தைகளுக்கு வழங்கச் செய்தார் தலைமை ஆசிரியர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதனை சற்றும் எதிர்பாராத குழந்தைகள், உற்சாகத்தோடு தலைமை ஆசிரியருடன் தீபாவளியை பள்ளி வளாகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

பெருமை

பெருமை

என்னதான் நாம் ஒரு சில ஆசிரியர்களின் செய்கையால் மழ வேதனை அடைந்தாலும் இப்படிப்பட்ட ஆசிரியர்களை நினைத்து பெருமைப்பட வேண்டியதுதான்.

படம்: https://tamilnaduteachersnews.blogspot.com

English summary
Virudhunagar HM gifts new dress and crackers for poor students in his school at his own cost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X