ஈரக்குலையே நடுங்குது.. குடிக்கிற தண்ணி தொட்டியில் "நாய் சடலம்".. அழுகி போய் கிடந்ததாம்.. சிவகாசியில்
சிவகாசி அருகே குடிநீர் தொட்டிக்குள் இறந்த நாய் சடலத்தை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்
விருதுநகர்: சிவகாசி அருகே குடிநீர் தொட்டியில் நாய் சடலம் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. இதுகுறித்த விசாரணையும் அதிகாரிகள் உடனடியாக கையில் எடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவ அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் இதுவரை ஒருத்தரும் கைது செய்யப்படவில்லை..
விசாரணையும் தீவிரமாகி கொண்டிருக்கிறது. அதற்குள் அடுத்த விவகாரம் வெடித்துள்ளது.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தண்ணீர் சப்ளை
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, இங்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், பிள்ளையார்கோவில் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியானது, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிதாக கட்டப்பட்டது... சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்க தொட்டியில், 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கலாம்... இந்த தொட்டியில் இருந்து மட்டுமே, அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது..

அழுகிய நாய்
பஞ்சாயத்து நிர்வாகத்தின் உத்தரவுப்படி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.. அதன்படி, கடந்த சனிக்கிழமை இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் ஏற்றாமல் இருந்ததாக தெரிகிறது. எனவே, நேற்று காலை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய டேங்க் ஆபரேட்டர் அங்கு வந்திருக்கிறார்.. அப்போது குடிநீர் தொட்டியில் ஏற முயன்றபோதே துர்நாற்றம் வீசியிருக்கிறது.. இதனால், பயந்துபோன அந்த டேங்க் ஆபரேட்டர், உடனடியாக இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசுக்கு தகவல் சொன்னதாக கூறப்படுகிறது..

நாய் சடலம்
போலீசாரும் விரைந்து வந்து, அந்த டேங்க்கின் மீது ஏறி பார்த்திருக்கிறார்கள்.. அப்போது நாய் ஒன்று டேங்கிற்குள் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என்கிறார்கள்.. போலீசார் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் சொல்லவும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள்.. குடிநீர் டேங்க்கை ஆய்வு செய்தனர்... தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றியதுடன், அதை போஸ்ட் மார்ட்டடம் செய்யவும் அனுப்பி வைத்தனர்...

இறந்த நாய்
அதற்கு பிறகு டேங்க் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது.. பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் தந்துள்ளார்.. நாயை கொன்றுவிட்டு, டேங்கிற்குள் யாராவது போட்டுவிட்டு போயிருக்கலாம் என்கிறார்கள்.. போலீசார் தீவிரமாக இதை பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார்கள். குடிநீர் தொட்டி உட்பட அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிந்துள்ளனர்.

ஷாக்கிங்
அதாவது, இந்த டேங்க்குகளை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது வழக்கம்.. அப்படி சுத்தம் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக தொட்டியை முழுதாக காலியாக வைத்திருப்பார்கள்.. அதற்கு பிறகு 2 நாட்கள் கழித்துதான், அந்த தொட்டி மாநகராட்சி ஊழியர்களால் சுத்தம் செய்யப்படும்... அப்படி தான் டேங்க்கை சுத்தம் செய்ய ஊழியர்கள் வந்தபோது, இப்படி ஒரு அதிர்ச்சியை கண்டுள்ளனர்.. இறந்த நாயை அடையாளம் தெரியாத நபர்கள் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது...
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications