அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடிச்சிடுவேன் - செய்தியாளர்களை மிரட்டிய ராஜேந்திரபாலாஜி

அமமுக பற்றி கேள்வி ஏதாவது கேட்டால் அப்படியே சப்பென்று அடிச்சிடுவேன் பாத்துக்கங்க என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நாக்கில் சனி அதனால்தான் அவர் பேசுவதெல்லாம் சர்ச்சையாகிறது. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் அமமுக பற்றி கேள்வி கேட்டால் அப்படியே சப்பென்று அடிச்சிடுவேன் பாத்துக்க என்று மிரட்டியுள்ளார் ராஜேந்திரபாலாஜி.

Recommended Video

    விருதுநகர்: அமமுக குறித்து கேட்டால் அடித்து விடுவேன்..மஞ்ச சட்ட கோவக்காரன்.. கே.டி.ஆர் அதிரடி!

    தமிழக சட்டசபைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இதற்காக தொகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களில் வேட்பாளர்கள் அலுவலகங்களை திறந்து வருகிறார்.

    I Will attack you Dont ask question AMMK - Minister Rajendrabalaji

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த ராஜேந்திரபாலாஜியிடம் செய்தியாளார்கள் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராஜேந்திரபாலாஜியிடம் அமமுக போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

    உடனே கோபப்பட்ட ராஜேந்திரபாலாஜி, என் கிட்ட அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடிச்சிடுவேன் பாத்துக்க என்று மிரட்டலாக சொன்னார். இதுக்குத்தான் உங்களுக்கு பேட்டியே தரக்கூடாது என்றும் சலித்துக்கொண்டார்.

    ராஜேந்திரபாலாஜி கடந்த சட்டசபைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சாரானவர். இந்த தேர்தலில் முதன்முறையாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். செய்தியாளர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+