Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல ஓட்டலில்.. சிக்கன் துண்டு வாயில் வைத்ததுமே குபீர்னு கொட்டிய ரத்தம்.. விருதுநகரில் ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சிக்கன் பிரியாணி வாங்கி ஆசை ஆசையாக சாப்பிட போனார் முகமது பாரித்.. அப்போதுதான் இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் - மதுரை சாலையில், பிரபலமான பிரியாணி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகின்றது... இந்த ஓட்டலுக்கு நேற்று முகமது பாரித் என்பவர், தன்னுடைய குழந்தைகளுக்காக பெப்பர் பார்பிக்யூ சிக்கன் வாங்கியிருக்கிறார்.

Virudhunagar srivilliputhur Mutton

பார்சலை வாங்கி கொண்டு, வீட்டிற்கு வந்து அதை பிரித்து சாப்பிட்டுள்ளார.. அப்போது திடீரென முகமதுவின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியிருக்கிறது.. இதனால் முகமது, சிக்கன் பார்சலை திறந்து உஉள்ளே பார்த்தபோது, நிறைய உடைந்த கண்ணாடி துண்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியிடைந்தார். உடனே அந்த சிக்கன் பார்சலுடன், ஹோட்டலுக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் இது குறித்து கேட்டிருக்கிறார். ஆனால் யாருமே சரியாக பதிலளிக்கவில்லையாம்.

மசாலா டப்பா: அதாவது, தண்ணீர் வைத்திருந்த கண்ணாடி பாட்டில், கிச்சனில் விழுந்து உடைந்துள்ளது... அதிலிருந்து சிதறிய கண்ணாடி துண்டுகள், மசாலா டப்பாவுக்குள் விழுந்திருக்கலாம் என்றும், இதனை கவனிக்காமல், அப்படியே சிக்கனில் மசாலா தடவி பொரித்து கஸ்டமருக்கு சாப்பிட தந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

முகமது சிக்கனை சாப்பிடும்போது, கண்ணாடி துண்டுகள் அவரது வாயை குத்தி கிழித்து ரத்தம் கொட்டியதாம்.. சிக்கன் துண்டுகளுக்கு உள்ளே நொறுங்கிய கண்ணாடி துண்டுகள் இருந்திருக்கின்றன.

குழந்தைகளுக்காக வாங்கி செல்லும் உணவில், இப்படியா அஜாக்கிரதையாக இருப்பது? மக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்றவர்களை சும்மா விடக்கூடாது என்று ஆவேசப்பட்ட முகமது, ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தந்தார்.. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், நேரடியாகவே ஓட்டலுக்கு விரைந்து வந்தார்.

நேரடி ஆய்வுகள்: கிச்சன், ஃபிரிட்ஜ், உணவு பொருட்கள் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த இடம், பால் குளிர்பதன பெட்டி, தயாரிக்கப்பட்ட மசாலா பதப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் என ஒன்றுவிடாமல் சோதனை மேற்கொண்டார்.

அப்போதுதான், ஹோட்டலில் கெட்டுப்போன பிரியாணியுடன் கூடிய 6 கிலோ சிக்கன், கெட்டுப்போன 50 அவித்த முட்டைகள், 2 கிலோ நாள்பட்ட மசாலா பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அனைத்தையும் பறிமுதல் செய்து, அனைத்து கெட்டுப்போன உணவும் அழிக்கப்பட்டன. மேலும், பெஞ்சால் கிரேவி, சமையல் எண்ணை, மசாலா என 5 பொருட்களை, உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வகத்துக்கு டெஸ்ட்டுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

கண்ணாடி துண்டு: இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சொல்லும்போது, "ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபல தனியார் ஹோட்டலில் தயாரித்த சிக்கன் உணவில் கண்ணாடி துண்டுகள் இருந்தது தொடர்பாக புகார் வந்தது. உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், நிறைய கெட்டுப்போன உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Virudhunagar srivilliputhur Mutton

அபராதம்: பாதுகாப்பாற்ற முறையில் உணவு பரிமாறியதற்கும், பொறுப்பற்ற தன்மையுடனும் செயல்பட்டதற்காகவும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திற்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது... இதைத்தவிர, ஹோட்டல் நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்கூட, கடந்த சில நாட்களாகவே, நிறைய ஓட்டல்கள் மீது புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.. நேற்று முன்தினம்கூட, கலெக்டர் உத்தரவின்பேரில், திற்பரப்பு பகுதிகளிலுள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.. அப்போது, கிலோ கணக்கில் மட்டன் கெட்டுப்போய் இருந்ததாம்..

கடைகளுக்கு சீல்: அழுகிய நிலையில் 15 கிலோ பீஃப், மட்டன், சிக்கன் போன்றவற்றை கண்டு அதிர்ந்த அதிகாரிகள், அனைத்தையும் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். 3 ஓட்டல்களுக்கு சீல் வைத்துவிட்டு போனார்கள். இந்த சம்பவத்தின் அதிர்ச்சிக்கு நடுவே, சிக்கனில் கண்ணாடி துண்டுகள் இருந்த விருதுநகர் சம்பவம் மேலும் பரபரப்பை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+