நேற்று திருமா -இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த குரல்!
விருதுநகர்: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதே கோரிக்கையை நேற்று விசிக தலைவர் திருமாவளவன் முன் வைத்திருந்த நிலையில் அவருக்கு வலு சேர்க்கும் வகையில் கே.பாலகிருஷ்ணனும் இதை தெரிவித்துள்ளார்.

மது விவகாரத்தில் தமிழக அரசு சில குழப்பமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விமர்சித்த அவர், தானியங்கி இயந்திரம் மூலம் மதுவிற்பனை, விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி என அரசின் முடிவுகளை சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசை பொறுத்தவரை இது போன்ற குழப்பமான நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மே தின விழாவில் கலந்துகொண்ட கே.பாலகிருஷ்ணன் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியிருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக மதுவிலக்கை பற்றி பேசாத நிலையில் இப்போது திமுக கூட்டணிக் கட்சிகளே அதைப் பற்றி பேசத் தொடங்கியிருப்பதும் அதனை அமல்படுத்த வலியுறுத்தி வருவதும் அரசியல் ரிதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
12 மணி நேர வேலை மசோதாவை முதலமைச்சர் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications