மொத்தமாக முடங்கும் விருதுநகர் மாவட்டம்.. ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: இஸ்ரேல் ஈரான் பிரச்சனையால், சிலிண்டர் தட்டுப்பாடு மட்டுமின்றி, 80 சதவீதம் தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வை சமாளிக்க முடியாமல், வரும் 12ந்தேதி முதல் 25ந்தேதி வரை தீப்பெட்டி ஆலைகளுக்கு விடுமுறை விட உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

Virudhunagar Faces Shutdown as Matchbox Raw Material Prices Soar by 80

தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 90% பெண்களே பணிபுரிந்து வருகின்றனர்.

தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்துப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தீப்பெட்டி மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. மெழுகு, அட்டை, பாலித்தீன் பேக் ஆகியவை ஈரானில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது. போர் காரணமாக அவை வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் இந்த மூலப் பொருட்களை ஸ்டாக் வைத்துள்ள நிறுவனங்கள் போரை காரணம் காட்டி விலையை கடுமையாக உயர்த்தியுள்ளனர். குறிப்பாக ஒரு கிலோ மெழுகு 80 ரூபாய்க்கு கடந்த சில மாதங்கள் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீப்பெட்டி பண்டல்கள் பேக்கிங்கிற்கு தேவையான பாலித்தீன் பைகள் ரகம் வாரியாக ஒரு கிலோ ரூ. 60 முதல் ரூ. 100வரை உயர்ந்துள்ளது. இதேபோன்று பாஸ்பரஸ், குளோரைட், பேப்பர், அட்டை என அனைத்து மூலப்பொருட்களின் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளதால் வரும் 12ஆம் தேதி முதல் 25ந்தேதி வரை தீப்பெட்டி ஆலைகளுக்கு விடுமுறை விட முடிவு செய்துள்ளனர்.தீப்பெட்டி ஆலைகள் தற்காலிகமாக மூடப்படும் நிலை ஏற்பட்டு, சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

இது குறித்து நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தியாவிற்கு தீப்பெட்டி வந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் 600 கோடி ரூபாய் வெளிநாட்டு வர்த்தகம் என 1400 கோடி ரூபாய் வர்த்தகம் தீப்பெட்டி உற்பத்தியின் மூலம் நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி விதிப்பினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது. இதையெடுத்து மத்திய அரசு அதைக் குறைத்தது. பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் அது முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என போராடி வருகிறோம் மேலும் மத்திய மாநில அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் போரை காரணம் காட்டி இயற்கையாகவும் செயற்கையாகவும் மூலப்பொருள் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது.

வளைகுடா போர் காரணமாக தீப்பெட்டி மூலப்பொருட்கள் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இனிமேல் தான் அந்த மூலப் பொருட்கள் வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே கையிருப்பு மூலப்பொருள்கள் தான் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூலப் பொருட்கள் தட்டுப்பாடு வரலாம் ஆனால் தீப்பெட்டியின் விலை ஏற வாய்ப்பு இல்லை.

ஆனால் தீப்பெட்டி மூலப் பொருட்களின் விலை 80% விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே போர் காரணமாக வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. எங்களால் தீப்பெட்டி விலையை உயர்த்த முடியவில்லை. ஒரு தீப்பெட்டி பண்டலுக்கு 40 முதல் 50ரூபாய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் நஷ்டத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் மூலப்பொருட்கள் விற்பனையாளர்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் வரும் 12ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆலைகளுக்கு விடுமுறை விட முடிவெடுத்துள்ளோம். இதனால் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+