அதிமுக கூட்டணி அற்புதமான தம்பதி.. திமுக கூட்டணி விவாகரத்தான தம்பதி.. அமைச்சர் அடடே பேச்சு
ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக கூட்டணி அற்புதமான தம்பதியாகும். ஆனால் திமுக கூட்டணியோ விவாகரத்தான தம்பதியாகும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?

பிரதமராக்குவோம்
அவர் பேசுகையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி 24 கட்சிகளை சேர்த்துக்கொண்டு, பிரதமர் வேட்பாளராக 24 பேரை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். பாஜக கூட்டணியினர் மட்டுமே மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் எனக்கூறி வாக்கு கேட்கிறோம்.

அதிமுக தலைமையிலான கூட்டணி
எம்.பி. தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் வந்து விடும். இந்த தேர்தலில் கோட்டை விட்டால் பின்னால் அந்த ஓட்டையை அடைப்பது கடினம். நல்ல முகூர்த்தம் பார்த்து அற்புதமான தம்பதிதான் அதிமுக தலைமையிலான கூட்டணியாகும்.

நாடு பாதுகாப்பு
திமுக தலைமையிலான கூட்டணி விவாகரத்தான கூட்டணியாகும். இந்தியாவின் இரும்பு மனிதர் பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும். அப்போதுதான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.

அதிமுகவுக்கு
தங்க தமிழ்ச் செல்வன் தேர்தல் முடிவதற்குள் வெளியேறி விடுவார். இன்னும் கொஞ்சம் நாளில் அமமுகவுக்கு மூடுவிழா நடத்திவிட்டு அங்கிருக்கும் தொண்டர்கள் அதிமுகவுக்கு வந்துவிடுவர் என்றார் ராஜேந்திர பாலாஜி.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications