விருதுநகரில் கொதிக்கும் நெய்யில் கை விட்டு அப்பம் சுட்ட 96 வயது பாட்டி! நெற்றியில் நெய் பூசி அதிசயம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில், 96 வயது பாட்டி, வெறும் கையாலேயே அப்பத்தை சுட்டு சுட்டு எடுத்தது காண்போரை திக்குமுக்காட செய்துவிட்டது.. இந்த வீடியோ தான் நேற்று முதல் இணையத்தில் வெளியாகி பக்தர்களுக்கு வியப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. யாரிந்த முத்தம்மாள்?

மகாசிவராத்திரியொட்டி, மாநிலம் முழுவதுமுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.. எப்போதுமே சிவராத்திரிகளில், ஓரிரு இடங்களில் விநோத வழிபாடும் நடைபெறுவது வழக்கமாகும்.

Virudhunagar Srivilliputhur

விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூர்

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பத்ர காளியம்மன் கோயிலில், வெறும் கையை கொதிக்கும் நெய்யில் விட்டு பணியாரம் சுட்டு எடுக்கும் வழிபாடு நடைபெறுவதும் வழக்கமாகும்.. இந்த கோவிலில் கடந்த 100 வருஷங்களுக்கு மேலாகவே, சிவராத்தியின் நள்ளிரவில் இந்த அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாகும்..

இதற்காகவே, மகாசிவராத்திரி இரவு அன்று 10 மணி முதலே கோவிலில் பக்தர்கள் கூட ஆரம்பித்துவிடுவார்கள்.. இரவு 11 மணி முதல் அதற்கான வேலைகளும் ஆரம்பமாகும். பிறகு 12 மணிக்கு மேல், காளியம்மன் சந்நிதி முன்பு புதிய மண் அடுப்பில் வாணல் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, கோவிலை சேர்ந்த பூசாரிகளுடன் அப்பம் சுடும் நிகழ்ச்சி ஆரம்பமாகும்.

முத்தம்மாள் அதிசயம்

முத்தம்மாள் என்கிற 96 வயது பாட்டிதான், இந்த மண் அடுப்புக்கு பக்கத்தில் உட்கார்ந்து, கொதிக்கும் நெய்யில் கையை விட்டு பணியாரம் சுட்டு எடுப்பார்.. முத்தம்மாள் பாட்டி சுட்டு தரும் பணியாரத்தை, அருகிலுள்ள பனையோலை பெட்டியில் அங்கிருப்பவர்கள் வாங்கி போடுவார்கள்.

இந்த நிகழ்வை, அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்குவார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த பக்தர்களுக்கும், பாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் கைவிட்டு, அந்த எண்ணெயையே பக்தர்களுக்கு நெற்றியில் விபூதியாக பூசி விடுவார். பாட்டியிடம் எண்ணெய் வாங்குவதற்காகவே பக்தர்கள் சிவராத்திரியில் குவிந்துவிடுவார்களாம்..

வெறும் கையால் அப்பம்

அந்தவகையில், நேற்று முன்தினம் இரவும், சிவராத்திரி என்பதால், முதலியார் பட்டி தெரு பத்ர காளியம்மன் கோயிலில் 11:30 மணிக்கு மேல் முத்தம்மாள் பாட்டி, கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பங்களை சுட்டு அம்மனுக்கு படைத்தார்..

இதில் முதன்முதலில் கொதிக்கும் நெய்யில் கைவிட்டு தனது நெற்றி மற்றும் கைகளில் நெய்யை பூசி கொண்டார்... பிறகு கொதித்த நெய்யை எடுத்து திருநீருடன் கலந்து மூதாட்டி பூசாரிகள் மற்றும் பக்தர்களுக்கும் பூசிவிட்டார்..

நெய்யை நெற்றியில் பூசி

பிறகு அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில் கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டைகளை மிதக்க விட்டு, அதனை கையாலேயே எடுத்து பனை ஓலை பட்டியில் சேகரித்தார்... அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் சுந்தர மகாலிங்கம், இருளப்பன், முருகன் போன்றோர் உடனிருந்தனர்.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அந்த அப்பங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்....

கொதிக்கும் நெய்யில் அப்பம்

விடிய விடிய அப்பம் சுடும்போது, பக்தி பாடல்களை பாடியபடி இருப்பாராம் முத்தம்மாள் பாட்டி.. கடந்த 53 ஆண்டாக முத்தம்மாள் அப்பம் சுட்டு வருகிறார். சிவராத்திரியில் அப்பம் சுட வேண்டும் என்பதற்காக, ஒரு மாதத்துக்கு முன்பாகவே விரதத்தை துவங்கி விடுவாராம்..

அந்தவகையில் கடந்த ஒரு மாத காலமாகவே வெறும் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து வந்துள்ளார். நேற்ற காலை காலை மூதாட்டி சுட்ட அப்பங்களை வைத்து பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பிறகு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெகிழ்ச்சி தருணம்தான் வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+