ஆட்சியை தக்க வைக்க இடைத்தேர்தலே எங்கள் இலக்கு… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பளீச்
விருதுநகர்: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் தான் தங்களின் இலக்கு என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டப்பணியின் சோதனை ஓட்டத்தை பார்வையிட்ட பின் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் ஓபிஎஸ் நேற்று விஜயகாந்தை சந்தித்ததின் மூலம் அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரெளடி என கூறியது குறித்து கேட்டதற்கு, நானா ரெளடி அவர் கூட உள்ளவர்கள் குண்டர்கள் போல் செயல்படுகிறார்கள். அதை கண்டிக்க கூடாதா? கண்டித்தால் தப்பா. உண்மையை சொன்னால் கசக்கும் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலை விட 21 சட்டமன்ற இடைத் தேர்தல் எங்களுக்கு முக்கியம்தான் அதில் என்ன சந்தேகம் என்று தெரிவித்த அவர், எடப்பாடி ஆட்சியை தக்க வைக்க எங்களுடைய இலக்கு சட்டமன்ற தொகுதி உண்மை தான் என விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications