Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவு நேர ரோந்து பணி.. விருதுநகர் மாவட்ட போலீசாரின் மாஸ்டர் பிளான்.. பொதுமக்கள் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் தினமும் போலீஸ் அதிகாரிகள் தனியே நியமனம் செய்யப்பட்டு பணி செய்து வருவதை மக்கள் பாராட்டி உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் இரவு நேரத்தில் தனித்தனியே போலீஸ் அதிகாரிகள், போலீசாரை நியமனம் செய்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு நாளும் நியமனம் செய்யப்படும் போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் பெயர், அவர்களின் செல்போன் எண் விபரங்கள் அந்தந்த மாவட்ட போலீசாரின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த பட்டியலில் இடம்பெறும் போலீசார் தங்களின் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு முழுவதும் வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான இரவு நேர காவல் பணியில் மொத்தம் 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர். டிஎஸ்பி முகேஷ் (செல்போன் 94981 05360) தலைமையில் விருதுநகர் உட்கோட்டத்துக்கு விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் (94421 83184) ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் சிவகாசி உட்கோட்டத்துக்கு சிவகாசி குற்றப்பிரிவு நகர போலீஸ்காரர் டேவிட் ரவிராஜன் (944 30 40588), அருப்புக்கோட்டை உட்கோட்டத்துக்கு அருப்புக்கோட்டை தாலுகா காவல நிலைய ஆய்வாளர் பார்த்திபன் (94981 84881), ராஜபாளையம் உட்கோட்டத்துக்கு ராஜபாளையம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் லாவண்யா (94981 85887) ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் உட்கோட்ட பகுதியில் வத்றாப் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் (94430 94656), சாத்தூர் உட்கோட்டத்துக்கு வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் (94981 96111), திருச்சுழி உட்கோட்ட பகுதியில் நரிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன் (86672 60020) ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

people-appreciates-virudhunagar-district-police-night-patrol-mission

பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தினமும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சார்பில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+