அதிமுக பிரச்சனைகளை பாஜக பேசுவதில் என்ன தப்பு- அசால்டாக கேட்கும் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: அதிமுக பிரச்சனைகள் குறித்து பாஜக ஏன் பேசுகிறது? அதிமுக விஷயத்தில் பாஜக தலையீடு ஏன் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "கூட்டணி அமைந்துள்ளதால் அதிமுக பிரச்சனையை பாஜக பேசத்தான் செய்யும்" என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, "கூட்டணி அமைந்துள்ளதால் பாஜக பிரச்சனையை அதிமுக பேசத்தான் செய்யும். அதேபோல அதிமுகவின் பிரச்சனையை பாஜகவும் பேசும்.

பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? இரு கட்சிகளும் கூட்டணி அமைந்ததில் இருந்து திமுக அச்சத்தில் உள்ளது. நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். காலமும், சூழலும் மாறும்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள், 'நடிகர் விஜய் அதிமுகவுக்கு வருவார் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் அவர் திமுக, பாஜகவுடன் கூட்டணியில்லை என்று சொல்லிவிட்டாரே' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி,
"அதனால் என்ன? களத்தில் இன்று இரண்டு கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று அதிமுக இன்னொன்று திமுக. மற்ற கட்சிகளெல்லாம் எங்கு போனது என்றே தெரியவில்லை. சில கட்சிகள் மூன்றாம் அணியை கூட அமைக்க முயன்று பார்த்தனர். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. மூன்றாம் கட்சிகள் முதலில் பேசப்படுவார்கள். பின்னர் பேசும் பொருளாக மாறிவிடுவார்கள்.
ஆக களத்தில் நிற்பது இரண்டு கட்சிகள்தான். இதில் ஜெயிக்கப்போவது அதிமுகதான். மற்ற கட்சிகள் எல்லாம் விட்டில் பூச்சிகளை போன்று வரும். ஆனால் களத்தில் நிற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் இருக்கின்றன. திமுக தரப்பில் காங்., இடதுசாரிகள், விசிக, மதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தரப்பில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. ஆனால் அதிமுக கூட்டணியில் முக்கிய முடிவுகளை பாஜகதான் எடுக்கிறது என்று அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
பெரியார் தொடங்கி அண்ணா வரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இப்படி இருக்கையில் எதற்காக அவர்களுடன் கூட்டணி என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மறுபுறம், கட்சியின் முக்கிய முடிவுகள், கட்சியின் பிரச்சனை பற்றிய விவாதங்களை பாஜக கையில் எடுக்கிறது. இதனை எடப்பாடி பழனிசாமியே பல நேரங்களில் உறுதி செய்திருக்கிறார்.
அதாவது, கடந்த 6ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடியிடம், முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான். அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்" என்று கூறியிருந்தார். இப்படி முக்கிய முடிவுகள் எதற்காக பாஜக எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கு ராஜேந்திர பாலாஜி தற்போது பதிலளித்திருக்கிறார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications