தமிழக உள்ளாட்சித் தேர்தல்.. திமுக வரலாறு காணாத தோல்வி அடையும்.. ராஜேந்திர பாலாஜி சாபம்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: திமுக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது என்றும், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் கிடையாது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒய்வு பெற்ற காவல் துறை நலச்சங்க கட்டிடம் திறப்பு விழாவில் கொண்டார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது பொருத்தமான விருது. அவரது நடிப்புக்கு, அவரது பணிக்கு, அவரது யதார்த்தமான பேச்சிற்கு கிடைத்திருக்கின்ற அவர் தமிழக மக்களை நேசிப்பதற்கான கிடைத்திருக்கின்ற ஒரு உயரிய விருதை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த விருதை பெற்றிருக்கின்ற ரஜினிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த விருதை மத்திய அரசு முன்கூட்டியே கொடுத்திருக்கலாம் மத்திய அரசு காலம் தாழ்த்தி இந்த விருது வழங்கி இருந்தாலும் பொருத்தமான நபருக்கு வழங்கியுள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.
திமுக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு அடி விழப் போகிறது என்பதின் தொடக்கம் தான் அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் கிடையாது.
இடைத் தேர்தல் பொதுத்தேர்தல் எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும். நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் தவறில்லை. நடிப்பவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் திரைப்படத்தில் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்க கூடாது.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு நடிகர்கள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் அரசியல் பேசுகிறார்கள் அதை சந்திக்கத்தான் அதிமுக உள்ளது. அதிமுகவை வீழ்த்த இனி ஒருவன் பிறந்து வர வேண்டும்.
அமமுக என்பது கட்சியல்ல அது ஒரு குரூப், அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அதிமுகவை நோக்கி அனைவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். தினகரன் கூடாரம் காலியாக உள்ளது. டிடிவி தினகரன் கலப்படவாத அரசியல்வாதி என தெரிந்து அமமுக வில் இருந்து விலகி அனைவரும் வருகின்றனர்.
அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டுமே தேர்தலில் போட்டி. சின்னம்மாவை டிடிவி தினகரன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். நடக்கப்போவதை பின்பு பாருங்கள்.
சுஜித் மீட்பு பணி குறித்து வைகோ திருமாவளவன் போன்றோர் அரசைப் பாராட்டுகின்ற வேலையில் ஸ்டாலின் போன்றோர்தான் அதை குறை கூறுகிறார்கள். திமுக ஆட்சியில் 10க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். அதற்கு ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். அதிமுக அரசை குறை கூற ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications