ம்மா, மன்னிச்சிரும்மா.. விருதுநகரை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரேஷ்மா.. சில மணி நேரத்திலேயே எடுத்த முடிவு
விருதுநகர்: தமிழகத்தில் இளம் பெண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த 2 தற்கொலைகள் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.. தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்கள் இளம் பெண்கள்.. அதிலும் காதலித்து திருமணம் செய்து, தங்களது கணவனுடன் வாழ்ந்து வந்தவர்கள். திடுதிப்பென இப்படி அவசர முடிவை எடுத்துள்ளனர்கள்.. இந்த 2 தற்கொலைகள் சம்பந்தமான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த தம்பதி மகேஷ் - லேகா.. 10 வருடத்துக்கு முன்பு மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்தபோது, காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்

தற்போது சத்தீஸ்கரில் ஒரு தனியார் கம்பெனியில் சதீஷ் வேலை பார்த்து வருகிறார்.. லேகா, குமரியில் தன்னுடைய கணவர் வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.. லேகாவுடன் சதீஷின் அம்மாவும் தங்கியிருந்தார்.
விருதுநகர் ராஜபாளையம் ரேஷ்மா
இந்நிலையில், வீட்டு வேலைகளை லேகா சரியாக செய்வதில்லை என்று மாமியார் அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த லேகா, வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.. இந்த தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
அதேபோல விருதுநகர் மாவட்டத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வசரண்.. இவரது மனைவி ரேஷ்மா.. 25 வயதாகும் செல்வசரண் டெம்போ டிரைவராக உள்ளார்.. 20 வயதாகும் ரேஷ்மா, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர்..
அம்மாவுக்கு போன்
இருவருமே உறவினர்கள் என்பதால், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமானதில் இருந்தே தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.. இதனால் கணவன்-மனைவி இருவருமே அடிக்கடி தகராறு செய்தும், சண்டையிட்டும் வந்துள்ளனர்.
அப்படித்தான் நேற்று முன்தினமும் ரேஷ்மாவிற்கும் செல்வசரணுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது... இதைத்தொடர்ந்து செல்வ சரண் வீட்டை விட்டு வெளியே சென்றார்.. அப்போது வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அழுதுகொண்டேயிருந்தார்.. அளவுக்கு அதிகமாக மனமுடைந்து காணப்பட்டார்.. இறுதியில் ரேஷ்மா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
உடனே ராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்த ரேஷ்மா, வாழ பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் சொல்லிவிட்டு போனையும் துண்டித்து விட்டாராம்..
ரேஷ்மா அதிர்ச்சி முடிவு
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேஷ்மாவின் அம்மா, நாகர்கோவிலில் உள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்து இதுபற்றி தெரிவித்தார். உடனே உறவினர்களும், ரேஷ்மாவின் வீட்டுக்கு ஓடினார்கள்.. ஆனால், ரேஷ்மாவின் வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.
இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு படுக்கை அறையில் ரேஷ்மா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்தனர்..
இதுகுறித்து உடனடியாக கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் ரேஷ்மா வீட்டிற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆவதால், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணையும் மிக தீவிரமாக நடந்து வருகிறது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications