Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்?

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஓட்டுகளை குறிவைத்து அவர் களமிறங்கி உள்ள நிலையில் அந்த தொகுதியில் எந்தெந்த ஜாதியை சேர்ந்த வாக்காளர்களின் ஓட்டுகள் எவ்வளவு உள்ளது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இந்த முறை தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில் இந்த முறை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

sattur-assembly-constituency-which-caste-has-the-highest-number-of-voters-in-nainar-nagendran-seat

இந்த தொகுதியில் திமுக சார்பில் கடற்கரை ராஜ் களமிறங்கி உள்ளார். நாம் தமிழர் சார்பில் ஆனந்த ராஜ் என்பவரும், தவெகவில் அஜித் என்பவரும் போட்டியிட்டுள்ளார். இதுதவிர நயினார் நாகேந்திரனை அரசியலில் வளர்த்துவிட்ட சசிகலா தற்போது அவருக்கு எதிராக திரும்பி உள்ளார். சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிஎம்டியின் இசக்கி ராஜா களமிறங்கி உள்ளார்.

எந்தெந்த ஜாதியினர் எவ்வளவு?

சாத்தூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,10,693 பேர். பெண்கள் 1,17,207 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 63 பேர் உள்ளனர். இந்த வாக்காளர்களில் முக்குலத்தோர் 27 சதவீதமாகவும், நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர் 23 சதவீதமாகவும், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 18 - 20 சதவீதமாகவும், யாதவர்கள் சுமார் 10% - 12 சதவீதமாகவும் உள்ளனர். இதுதவிர நாடார் உள்பட பிற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முக்குலத்தோரை குறிவைத்து...

நயினார் நாகேந்திரன் தொகுதி மாறி போட்டியிட முக்கிய காரணம் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகம் தான். சாத்தூர் சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 27 சதவீதம் பேர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற்று வெல்லும் முனைப்பில் நயினார் நாகேந்திரன் சாத்தூரை தேர்வு செய்துள்ளார்.

திமுக வேட்பாளர் எந்த ஜாதி?

அதேவேளையில் 23 சதவீத வாக்காளர்கள் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் தான் திமுக நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த கடற்கரை ராஜ் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. நயினார் நாகேந்திரன் தொகுதிக்கு புதியவர். ஆனால் கடற்கரை ராஜ் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அதோடு மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர். இதனால் இந்த தொகுதியில் நிச்சயம் போட்டி கடுமையக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+