சாத்தூர் பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து..உடல் சிதறி ஊழியர் பலி
விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசுகடையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடைக்குள் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. பாட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளும் அதிகம் உள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் இந்த கடைகளில் இருந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

சாத்தூர் அருகே நான்கு வழி சாலைகளிலும் பட்டாசு கடைகள் நிறைய உள்ளன. இந்த நிலையில் அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அதில் கடைக்குள் இருந்த ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்த காரணத்தால் தீயணைப்பு வீரர்களால் தீ விபத்து நிகழ்ந்த கடையை நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் கடைக்குள் சிக்கியிருந்த ஊழியர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
