மஹா சிவராத்திரி.. கொதிக்கும் எண்ணெயில் கையை விட்ட முத்தம்மா.. மெய் சிலிர்த்த பக்தர்கள்!
Recommended Video

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு மேலாக நள்ளிரவு நடைபெற்று வரும் இந்நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மெய் சிலிர்த்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவில் உள்ளது பத்ரகாளியம்மன் திருக்கோவிலில். கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நேற்று சிவராத்தியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற பாட்டி மற்றும் கோவில் பூஜாரிகள் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றில் பூசி விடுவர். கடந்த காலங்களில் வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டனர். தற்போது முத்தம்மாள் கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார்.

பாட்டியின் விரதம்
இதற்காக அவர் 40 நாட்கள் விரதம் இருந்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது. 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவர்.

பயபக்தியுடன்
முன்னதாக பாசிப்பயிறு தட்டாம் பயிறு கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

நோய்கள் குணமாகும்
இங்கு வந்து மஹா சிவராத்திரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும் எவ்வித நோயும் வராது என்று நம்புகின்றனர்.

குழந்தை பாக்கியம் உண்டாகும்
மேலும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இன்று வரைக்கும் நடை முறையில் உள்ள நம்பிக்கையாகும்.

61வது வருடமாக
கடந்த 60வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி இன்று 61வது வருடத்தில் வெறும் கையினால் கொதிக்கும் நெயில்அப்பம் சுடவிருக்கும் நிகழ்சியை காண்பதற்கு ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications