Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகாசி சுதாவிற்கு கிடைத்த 55 லட்சம். விருதுநகர் தொழில் அதிபருக்கு நம்பவே முடியாத நம்பிக்கை துரோகம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேராபட்டியில் தொழில் அதிபர் கண்ணன் என்பவர் அச்சகம், கிரானைட், டைல்ஸ் நிறுவனம், குவாரி நடத்தி வருகிறார். இவருக்கு சாலைப்பணிக்கு டெண்டர் வாங்கி தருவதாக சுதா என்பவர் ரூ.55 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. போலி வட்டார வளர்ச்சி பெண் அதிகாரியாக அறிமுகம் ஆகி பணத்தை ஏமாற்றியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை கைதாகி உள்ளார்.

போலியான அரசு அதிகாரிகள் என்று அறிமுகம் ஆகி, சிலர் தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். சிலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி ஏமாற்றி மோசடி செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கணடு, காவல்துறையில் புகார் அளித்தால் தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் பணத்தை இழந்து இறுதியாக காவல்துறையில் போய் புகார் அளிக்க வேண்டிய நிலை வந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் சிவகாசியில் நடந்துள்ளது.

Sivakasi Sudha received 55 lakhs Unbelievable betrayal of trust for Virudhunagar businessman

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேராபட்டியைச் சேர்ந்த 51 வயதாகும் கண்ணன் தொழில் அதிபர் ஆவார். இவர் சிவகாசியில் அச்சகம், கிரானைட், டைல்ஸ் நிறுவனம், குவாரி நடத்தி வருகிறார். ஒரு அறக்கட்டளை மூலம் முதியோர் காப்பகம் நடத்த முயற்சி செய்து வந்தார்.

இவரது நிறுவனத்தில் வேலைபார்த்த சங்கரநாராயணன் என்பவர் என்ஜினியராக வேலை செய்தார். இந்நிலையில் சிவகாசி கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்த வெங்கட்ராமானுஜம் என்பவருடைய மகள் சுதாவை (37) அவர் அறிமுகப்படுத்தினார். இவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவதாகவும், விரைவில் சிவகாசி யூனியனுக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற இருப்பதாகவும் கூறி நம்ப வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சுதா, நான் வீடு கட்ட உள்ளேன், அதற்கு கிரானைட் கற்கள் தேவைப்படுவதாக கண்ணனிடம் கூறி இருக்கிறார். அப்போது உங்கள் குவாரியில் இருந்து கிரானைட் கற்கள் தந்தால், பேராபட்டியில் சாலை அமைப்பதற்கு டெண்டர் பெற்றுத்தருகிறேன் என சுதா கூறியிருந்தாராம்.

டெண்டர் அனுமதிக்கும், முதியோர் காப்பகம் கட்டவும் கலெக்டரிடம் பேசி அனுமதி வாங்கி தர வேண்டும் என்றால் கேட்கும்போது பணம் தர வேண்டும் என்றும் கூறினராம். இதையடுத்து கண்ணன், பல முறையாக வங்கி மூலம் ரூ.55 லட்சத்து 42 ஆயிரத்தை அனுப்பினாராம். ஆனால் அனுமதி பெற்று கொடுக்கவில்லை. விசாரித்ததில் சுதா போலி வட்டார வளர்ச்சி அதிகாரி என்பது தொழில் அதிபர் கண்ணனுக்கு தெரியவந்தது.

இதையடுத்து தொழில் அதிபர் கண்ணன் அளித்த புகாரின்பேரில், சுதா, அவருடைய தந்தை வெங்கட்ராமானுஜம் (72), என்ஜினியர் சங்கரநாராயணன், உதவியாளர் பீமா பேகம் உள்பட 8 பேர் மீது விருதுநகர் பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுதா, வெங்கட்ராமானுஜம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+