தை பிரதோஷம்.. தை அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. வனத்துறை விதித்த கட்டுப்பாடுகள் என்ன?
விருதுநகர்: தை மாத தேய்பிறை பிரதோஷம், தை அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுந்தரமகாலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்று முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர்.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.
இங்குள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் தரிசனம் செய்ய மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியையொட்டிய 8 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தை மாத தேய்பிறை பிரதோஷம், தை அமாவாசை வழிபாட்டுக்காக பிப்ரவரி 7 இன்று முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் எனவும் இரவில் பக்தர்கள் தங்குவதற்கும், ஆற்று பகுதிகளில் இறங்கி குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
தை மாத தேய்பிறை பிரதோஷம் தினமான இன்று சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் சதுரகிரிக்கு வந்துள்ளனர். தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications