“தவெக நிலைமை அந்தோ பரிதாபம்.. தேமுதிக ஐசியுவுக்கு போகும்”.. காட்டமாக பேசிய ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: தவெக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. தனித்து நிற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைமை அந்தோ பரிதாபம் என்றும், தேர்தலுக்குப் பிறகு தேமுதிக ஐசியு-வுக்கு போகும் என்றும் கூறியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் தகிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலை விட தேர்தல் அனல் சூட்டைக் கிளப்பி வருகிறது.

சிவகாசி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். சிவகாசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, "தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதிமுக கூட்டணிக்கு ஜாதகமாக உள்ளது. வயது வரம்புின்றி அனைத்து தரப்பினரும் ஆதரிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி மீது கோபக்கணைகளை வீசுகின்றனர். அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
அதிமுக தேர்தல் அறிக்கை நாட்டில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே வலியுறுத்தும். திமுக ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். தமிழ்நாட்டில் போதைக் கலாச்சாரம், பாலியல் வன்முறை, குற்ற சம்பவங்கள் ஆகியன பெருகி சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தமிழகத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.
தேர்தல் முடிவுக்குப் பின்பு தான் ஐசியு வார்டுக்கு அதிமுக போகுதா? தேமுதிக போகுதா? என்பது தெரியவரும். ராஜதந்திரியான கலைஞரால் கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை. 53- வயதாகும் அதிமுகவில் புது ரத்தத்துடன் இளைஞர்கள் எடப்பாடி பின்னால் அணிவகுத்து நிற்பதால் திமுக கூட்டணியும் தேமுதிகவும் தான் ஐசியுக்கு போகும்.
1980-ல் எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுக இருக்காது என்றனர். அதிமுக அழியும் என சொல்பவர்களின் அரசியல் வாழ்க்கை தான் முடிந்து போகும். தனித்து நிற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைமை அந்தோ பரிதாபம் என்ற நிலைக்கு உள்ளாக்கப்படுவார்கள். 210 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி அமைக்கும். மெஜாரிட்டி பலத்தோடு எடப்பாடி பழனிச்சாமி வலுவான முதல்வர் ஆவார்." எனத் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல்











Click it and Unblock the Notifications