வீட்டு முன் விளையாடிய 2 சிறுமிகள்.. எமனாக மாறிய இரும்பு கேட்.. விருதுநகரில் துடிதுடித்த பிஞ்சுகள்
விருதுநகர்: விருதுநகர் சிவகாசி அருகே வீட்டின் வாசலில் இருந்த இரும்பு கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். வீட்டின் முன்பு இருந்த இரும்பு கேட்டில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது சரிந்து விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கமலிகா, ரிஷிகா ஆகிய இரு சிறுமிகளும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் வசித்து வருபவர் ராஜாமனி. இவரது 9 வயது மகள் கலலிகா. பள்ளியில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டதால் அவரது உறவுக்கார சிறுமி 4 வயது ரிஷிகாவும் இவரது வீட்டுக்கு வந்திருந்தார்.

விடுமுறை என்பதால் வீட்டில் சிறுமிகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வாசலில் இருந்த இரும்பு கேட் முன்பு சிறுமிகள் இருவரும் விளையாடியுள்ளனர். அப்போது திடீரென இரும்பு கேட், தடுப்புச் சுவரோடு இடிந்து விழுந்தது.
இதில் சிக்கிக்கொண்ட இரு சிறுமிகளும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமிகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
சிறுமிகள் உயிரிழந்ததாக சொன்னதும் மருத்துவமனையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications