தங்கச்சினு நினைக்கல.. 16 வயது இரட்டை தங்கைகள் நள்ளிரவில் கதறி.. விருதுநகர் வீட்டில் யாரிந்த நோயாளி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றினாலும், நாளுக்கு நாள் கொடுமைகள் நடந்தவண்ணம் உள்ளது.. பச்சிளம் குழந்தையானாலும், 16 வயது பெண் என்றாலும், 60 வயது மூதாட்டி என்றாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் விருதுநகர், கேரளாவில் நடந்த இரு சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அகலவில்லை.. இது தொடர்பான போலீஸ் விசாரணையும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த அந்த மூதாட்டிக்கு 65 வயதாகிறது. இவர் நேற்றைய தினம் தன்னுடைய வீட்டிலிருந்து அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு, தன்னுடைய வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.

Virudhunagar Younger sisters Kerala 16

அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார்.. ஆனால் இதனை மூதாட்டி கவனிக்கவில்லை... ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மூதாட்டி வந்தபோது, அந்த மர்ம நபர் மூதாட்டியை அருகிலுள்ள புதருக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதை பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்..

புதரில் படுகாயத்துடன் பாட்டி

அப்போது அந்த வழியாக வந்த நபர்கள், புதருக்குள் மூதாட்டி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து கண்ணநல்லூர் போலீசிலும் புகார் தந்தனர்..

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு, மூதாட்டியை பலாத்காரம் செய்த மர்ம நபரை தேட துவங்கினார்கள்.. அப்போது சம்பவ இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதருக்குள் பதுங்கியிருந்த ஒருவரை போலீசார் பிடித்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மீயன்னூர் பகுதியை சேர்ந்த அனூஜ் (வயது 27) என்பதும், மூதாட்டியை பலாத்காரம் செய்தது இவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அனூஜை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

சிறுநீர் கல்லடைப்பு

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், விருதுநகரில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் சுமன்.. 32 வயதாகிறது.. சிறுநீர் கல்லடைப்பு நோய்க்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அடிக்கடி சிகிச்சை பெறவேண்டியிருப்பதால், மதுரை பக்கத்திலேயே ஒரு கிராமத்திலுள்ள தன்னுடைய உறவினரான மூதாட்டியின் வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீட்டில் மூதாட்டியின் பேத்திகளான 16 வயதுடைய இரட்டை சிறுமிகள் அவரது பாதுகாப்பில் வசித்து வந்தனர்.

அலறிய சிறுமிகள்

சம்பவத்தன்று இரவு வீட்டில் சிறுமிகள் தூங்கி கொண்டிருந்தபோது சுமன், இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமிகள் அலறி கூச்சலிடவும், சுமன் அங்கிருந்து எகிறி குதித்து தப்பிஓடி விட்டார். ஆனால், பாலியல் டார்ச்சர் தரப்பட்டு மன வேதனைக்கு ஆளான ஒரு சிறுமி, விஷம் குடித்துவிட்டார்..

உடனே அக்கம்பக்கத்தினர் அச்சிறுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல சிறுமிகளின் பாட்டி, நடந்த விவரங்களை கூறி மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமனை வலைவீசி தேடி வந்தனர்.

19 வயது அண்ணன்

இதனிடையே, சிறுமிகளின் உடன்பிறந்த 19 வயது அண்ணன், சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய 2 தங்கைகளையும் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.. அப்போது அங்கு சுமன் நின்றிருப்பதை பார்த்ததுமே ஆவேசமாகிவிட்டார்..

தங்கைகள் உடல்நலம் பாதித்து, சிகிச்சை பெற்று வரும் இடத்தில், இங்கு ஏன் சுமன் வரவேண்டும்? என்று ஆத்திரப்பட்டு, கத்தியால் சுமனை குத்திவிட்டார்.. இதில் படுகாயம் அடைந்த சுமன், மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.. இதுதொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+