லைம்லைட்டுக்கு வந்த ராஜேந்திர பாலாஜி.. மீண்டும் ஸ்டாலினை போட்டு தாக்கி.. பரபரத்த விருதுநகர்
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: ஏன்தான் திமுகவுக்கு ஓட்டு போட்டோமோ என்று மக்கள் வெட்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆளும் கட்சியை விமர்சித்துள்ளார்.
கோர்ட், வழக்கு, ஜாமீன் என அனைத்து பரபரப்புகளும் ஓரளவு தணிந்த நிலையில் மீண்டும், லைம்லைட்டுக்கு வந்துள்ளார் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
கடந்த ஆட்சியில், திமுகவையும், முக ஸ்டாலினையும் அளவுக்கு அதிகமாகவே விமர்சித்தவர் இவராகத்தான் இருக்க முடியும்.. ஒருகட்டத்தில் எல்லைமீறி, ஒருமையில் ஸ்டாலினை திட்டிய வீடியோக்கள் அத்தனையும் யூடியூபில் வைரலாகின.

தண்டனை
சிறிது மாத கால இடைவெளிக்குபிறகு, விருதுநகர் மாவட்ட அதிமுக சூடுபிடித்துள்ளது.. விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது... அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி மறுபடியும் திமுகவையும், ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்து, புகார்களை கூற ஆரம்பித்தார்.

ஜனநாயகம்
"ஜனநாயக முறைப்படி அதிமுகவில் கழக அமைப்பு தேர்தல் நடக்கிறது.. திமுக ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்... அதற்கு மத்திய அரசைக் குறை சொல்லியே, காலம் கடத்தும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபடுகின்றனர்... இந்தக் குற்றச்சாட்டைத் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். மின்வெட்டு பிரச்சனையில் திமுக அரசு திணறுகிறது...

மின்வெட்டு
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் விலைவாசி உயர்கிறது... மின்வெட்டு வாடிக்கையாகி விடுகிறது. திமுகவுக்கு வாக்களித்ததற்குப் பொதுமக்கள் தற்போது வேதனைப்படுகின்றனர். வெட்கப்படுகின்றனர். திமுக அரசு விரைவில் முடிவுக்கு வரும். திமுகவால் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது. அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

விருதுநகர்
தமிழகத்தில் அதிமுக தான் இன்று ஆளுங்கட்சியாக மக்கள் பணியாற்றுகிறது... வருகின்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்.. என்னையும், கழக நிர்வாகிகளையும் போட்டியின்றி தேர்வு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.. ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள நிலையில், விருதுநகர் அதிமுக உற்சாகத்தில் உள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications