தங்கபுஷ்பமும் காளிதாஸும்.. சரமாரி உறவு.. திடீரென வந்த பயம்.. 2 கொலை.. நடுங்கி போன சிவகாசி!
பெற்ற குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் தந்தை
விருதுநகர்: தங்கபுஷ்பம் தவிர வேறு ஒரு பெண்ணுடன் காளிதாசுக்கு உறவு இருந்தது... இதனால் தனக்கு எய்ட்ஸ் இருக்குமோ, தன் பிள்ளைகளுக்கும் எய்ட்ஸ் இருக்குமோ என்று பயந்து கொண்டு, 2 குழந்தைகளையும் கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் சிவகாசி பகுதியில் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் செங்கமலப்பட்டி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் காளிதாஸ்.. 27 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் தங்கபுஷ்பம்.. அவருக்கு 26 வயதாகிறது.. 5 வயதில் மாரிஸ்வரன் என்ற மகனும், 4 வயதில் காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
காளிதாஸுக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாது.. தினமும் ஊரையெல்லாம் சுற்றி வருவதுதான் ஒரே வேலை.. அதனால் தங்கபுஷ்பம்தான் குடும்பத்தை முன்னின்று நடத்துகிறார்.. அப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தார் தங்கபுஷ்பம்.. 2 பிள்ளைகளும் தூங்கி கொண்டிருந்தனர்.. விளையாடிவிட்டு களைப்பில் தூங்குகிறார்கள் என்று நினைத்த தங்கபுஷ்பம், சமையல் செய்து முடித்தார்.. அதன்பிறகு அவர்களை சாப்பிட எழுப்பினார்.
அப்போது 2 குழந்தைகளும் அசைவற்று கிடப்பதை பார்த்து பதறினார்.. கணவரிடம் என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர், "நான் தான் குழந்தைகளை கழுத்து நெரிச்சு கொன்னுட்டேன்" என்று கேஷூவலாக சொன்னார்.
இதை கேட்டு தங்கபுஷ்பம் கதறி புரண்டு அழுதார்.. தகவலறிந்து சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து வந்து குழந்தைகளின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக காளிதாஸையும் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது அவரது வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து விட்டனர்.
காளிதாஸ் சொல்லும்போது,"எனக்கு ஒருத்தியோட உறவு இருந்தது.. அதனால எனக்கு எய்ட்ஸ் இருக்குமோன்னு டவுட்டா இருந்தது.. அதனால, நான், தங்கபுஷ்ம், குழந்தைகளை அழைத்து கொண்டு, சிவகாசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் எச்ஐவி டெஸ்ட் செய்து கொண்டுள்ளேன். ஆனால் டெஸ்ட் ரிப்போர்ட்டில் நோய் தாக்கம் இல்லை என்று வந்தது.. ஆனாலும், எனக்கு அந்த ரிப்போர்ட்டில் நம்பிக்கை இல்லை.
உடனே கூகுள் மூலம் நானே டெஸ்ட் செய்தேன்.. அப்படி ஆய்வு செய்யும்போது, எச்ஐவி அறிகுறிகள் இருப்பதாக எனக்கு தெரிந்தது.. இதுதான் எனக்கு ஷாக் ஆக இருந்தது.. அதனால் தங்க புஷ்பம் வேலைக்கு போனபிறகு, 2 குழந்தைகளையும் கழுத்து நெரிச்சு கொன்னு தரையில போட்டுட்டேன்.. விஷயம் தெரிஞ்சு தங்கபுஷ்பம் கத்தி சத்தம் போடவும், கடப்பாறை எடுத்து வந்து அவளை கொல்ல முயற்சி செய்தேன்.. அதுக்குள்ள அக்கம்பக்கத்திகனர் வந்துவிட்டனர்.. நானும் தப்பிவிட்டேன்" என்றார்... தொடர் விசாரணை காளிதாஸிடம் நடந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications