விருதுநகரில், அண்ணாமலையை திடீர்னு "சுற்றி" வளைத்த கூட்டம்.. ஏடாகூடமா சிக்கிட்டாரு.. ஆனா "மலை" அசரலயே
விருதுநகர்: விருதுநகர் பாதயாத்திரையின்போது, ஆயிரக்கணக்கானோர் மத்தியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கிக் கொண்டார்.. அதுக்கப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
"என் மண் என் மக்கள் யாத்திரை"யில் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.. தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபயணத்தை துவங்கி உள்ளார். கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிக்குள்ளும் நடைபயணம் சென்றார்..

பாரதியார்: அங்கு பாரதியார் வீட்டிற்கு சென்றார்.. பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.. பாரதியார் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார்.. பாரதியார் நூல் கவிதைகளையும் பார்வையிட்டார். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
அண்ணாமலை செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம் குவிகிறது.. கூடியிருந்த பொதுமக்களிடம் அண்ணாமலை சென்று பேசுகிறார்.. அவர்களிடம் நலம் விசாரிக்கிறார்.. வழி நெடுகிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தவாறே உள்ளனர்.. வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்டவாறும் நடந்து செல்கிறார்.
விருதுநகர்: ஆனால், சில இடங்களில் எதிர்ப்புகளும் அண்ணாமலைக்கு இருக்கத்தான் செய்கிறது.. இப்படித்தான், விருதுநகர் மாவட்டத்தில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டிருந்தார்.. அப்போது, அங்கிருந்த மன்னர் பெரும்பிடுகு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.
ஆனால் திடீரென முத்தரையர் சமூகத்தினர் ஒன்றுதிரண்டு வந்துவிட்டனர்.. "திமுகவும் எங்களை புறக்கணிக்கிறது, பாஜகவும் புறக்கணிக்கிறது, பாஜக மூத்த தலைவர் அமித்ஷா ராமேசுவரத்துக்கு வந்தபோதும் எங்களை மதிக்கவில்லை.. அதனால், சிலைக்கு மாலை அணிவிக்க உங்களை உள்ளே விட மாட்டோம்" என்று ஆவேசமாக கூறினார்கள். அத்துடன், அண்ணாமலையை நகர்ந்து செல்லாதவாறு, தடுத்து சுற்றிலும் அரண்போல் நின்று கொண்டார்கள்.
இதைப்பார்த்து, அங்கிருந்த பாஜகவினரும், போலீசாரும் பதறிப்போனார்கள்.. எங்கே மோதல் வெடித்து விடுமோ என்ற பரபரப்பு அங்கே தொற்றிக் கொண்டது.. ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டத்துக்கு நடுவில் அண்ணாமலை வசமாக சிக்கிக்கொண்டார்..
அசரலையே: ஆனால், கொஞ்சம்கூட அண்ணாமலை அசரவில்லையே.. அதற்காக அவர்களிடம் கோபப்படவும் இல்லை.. வழக்கம்போல் தன் ஸ்டைலிலேயே பேச்சை தொடங்கினார்.. "அண்ணா.. வழியை விடுங்கண்ணா.. நான் உங்களுடன் பேச வரல.. விதண்டாவாதம் பண்ணாதீங்க.. நான் மன்னருக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறேன்... நாங்க ஒன்னும் திராவிட கட்சிகளை போல கிடையாது.. இதை நீங்கள் உண்மையிலேயே, உணர்ந்தால் என்னை உள்ளே விடுங்கள்" என்றார்.
அத்தனை நேரமும் ஆவேசத்துடன் கொந்தளித்து நின்றவர்கள், அண்ணாமலை இப்படி பேசியதுமே, டக்கென ஆஃப் ஆகிவிட்டார்கள்.. தடுத்து நின்றவர்கள் விலகிவிட்டனர்.. அண்ணாமலையையும் உள்ளே வர அனுமதித்தனர்.. பிறகு, மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார் அண்ணாமலை..
இதுதான்டா கெத்து: அடடடடா.. இதென்ன புதுசா இருக்கே? பெரிய அளவில் மக்கள் திரண்டு எதிர்த்தால், தலைவர்கள் பலரும் அமைதிகாத்து, அங்கிருந்து விலகியும், ஒதுங்கியும், பின்வாங்கியும் சென்று விடுவார்கள்.. இதுதான் உலக வழக்கமாக இருந்து வருகிறது..
அப்படியிருக்கும்போது, தன்னை திரண்டு எதிர்த்த கூட்டத்தை பார்த்து மிரண்டு போகாமல், கனிவாக பேசி, கெத்து காட்டிவிட்டு, கூட்டத்தையும் தகர்த்து சாதித்துவிட்டு போகிறாரே, இதுதான் ஐபிஎஸ் கெத்து போல" என்று பாஜகவினர் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்களாம்.. இது எப்படி இருக்கு!!












Click it and Unblock the Notifications