24 பேரை பலி வாங்கிய விருதுநகர் ஆலையில் தடை செய்யப்பட்ட பட்டாசு தயாரிக்கப்பட்டதா? பரபர தகவல்
விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர். 21 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விருதுநகர் ஆலையில் தடை செய்யப்பட்ட பட்டாசு தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளர்.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பட்டாசு விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தீயணைப்பு வீரர்கள், காவலர்கள் என 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பட்டாசு விபத்து தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:

பட்டாசு ஆலையின் உரிமையாளர் முத்து மாணிக்கம். 52 வயதான இவர், வேறு ஒருவருக்கு பட்டாசு ஆலையை குத்தகைக்கு விட்டதாக சொல்லப்படுகிறது. அனுமதிக்க வேண்டிய தொழிலாளர்களை விட கூடுதல் தொழிலாளர்கள் மூலம் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டதும் வேதிவினை மாற்றத்தால் வெடிபொருள் வெடித்து 23 பேர் பரிதாபமாக பலியானதும் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் வச்சாகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாரர்கள். நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் பட்டாசு உற்பத்தியில் அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். அதிலும் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு வந்து இருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசருக்கு வலுத்துள்ளது.
பெண்கள் வீடுகளில் கூட சரவெடிகளை தயாரித்து அனுப்பி வைப்பதாக புகார்கள் உள்ளன. 40 க்கும் மேற்பட்ட பெண்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், சரவெடிகள்தான் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications